ஹோம் /நியூஸ் /இந்தியா /

வலியில் அவதிப்பட்ட ஐயப்ப பக்தர்.. காலுக்கு மசாஜ் செய்த கேரள அமைச்சர்

வலியில் அவதிப்பட்ட ஐயப்ப பக்தர்.. காலுக்கு மசாஜ் செய்த கேரள அமைச்சர்

பக்தருக்கு முதல் உதவி

பக்தருக்கு முதல் உதவி

தேவசம் அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் பம்பை நோக்கி மலை இறங்கி செல்லும் போது ஐயப்ப பக்தன் அவதிப்பட்டு உக்காந்து இருப்பதை பார்த்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

மசில் வலியால் அவதிப்பட்ட பிற மாநில ஐயப்ப பக்தர் ஒருவருக்கு கேரளா தேவசம் அமைச்சர் முதல் உதவி செய்து அனுப்பும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் நேற்று முதல் ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கேரளா மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் செல்லும் பாதையில் மரக்கூட்டம் பகுதியில் பிற மாநில ஐயப்ப பக்தர் ஒருவர் காலில் கடுமையான மசில் வலியால் மலையேற முடியாமல் அவதிப்பட்டு இருந்தார்.

அந்நேரம் சன்னிதானத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு கேரளா தேவசம் அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் பம்பை நோக்கி மலை இறங்கி செல்லும் போது ஐயப்ப பக்தன் அவதிப்பட்டு உக்காந்து இருப்பதை கண்டு அந்த பக்தரின்  காலில் அமைச்சரே மசாஜ் செய்து முதல் உதவி செய்து சன்னிதானத்திற்கு அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க: Exclusive: இனி கொரோனாவால் ஆபத்து இல்லை... ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

இந்த சம்பவத்தை யாரோ ஒருவர் மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததை அடுத்து இந்த புகைப்படத்தை கேரளா அமைச்சர் சிவன் குட்டி, மற்றும் mla க்கள் பலர் தங்களது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்தனர். தற்போது இந்த புகைப்படம் கேரளா மாநிலம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

Published by:Murugesh M
First published:

Tags: Kerala, Minister, Sabarimala