ஹோம் /நியூஸ் /இந்தியா /

நெய்மர் ஃபேன் டா..! - ஃபுட் பால் ஆடுவதாக பஸ் மீது பாய்ந்து கண்ணாடி உடைத்து இளைஞர் அட்டகாசம்

நெய்மர் ஃபேன் டா..! - ஃபுட் பால் ஆடுவதாக பஸ் மீது பாய்ந்து கண்ணாடி உடைத்து இளைஞர் அட்டகாசம்

கேரளா இளைஞர்

கேரளா இளைஞர்

கால்பந்து விளையாட்டின் மீது தீராத மோகம் கொண்ட மனநல பாதிக்கப்பட்ட இளைஞர் செயல் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India

 கேரளா மாநிலம் மலப்புரத்தில் ஓடும் பேருந்தின் முன் தாவி   குதித்து கால்பந்து விளையாட்டு பாணியில் ஹெட் செய்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா பகுதியை சேர்ந்தவர் இளைஞர் ராஜேஷ். பரபரப்பான சாலையில் நேற்று மாலை 5 மணியளவில் இவர் செய்த சேட்டை வீடியோ இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சாலையில் சத்தம்போட்டுக்கொண்டிருந்த ராஜேஷ் சாலையில்  வந்துக்கொண்டிருந்த பேருந்தை நோக்கி ஓடினார். ராஜேஷ் ஓடி வருவதை கண்ட பேருந்து ஓட்டுனர் வாகனத்தை நிறுத்த முயன்றார். ஓடி வந்த ராஜேஷ் ஃபுட் பால் விளையாட்டில் ஹெட் செய்வது போல் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது பலமாக மோதினார்.

இதில் பலத்த சத்தத்துடன் பேருந்து கண்ணாடி உடைந்தது. ராஜேஷ் சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.  இதில் அவருக்கு கை மற்றும் கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. இதனை அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் கண்டனர். சிலர் இந்த சம்பவத்தை வீடியோவாகவும் பதிவு செய்தனர். சாலையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தவர் விறுவிறு என்று பேருந்துக்குள் ஏறினார்.

Also Read:  INDvsENG: இன்று டி20 அரையிறுதி.. பவுண்டரி ஈசிதான்.. கோலியின் கோட்டை.. அடிலெய்ட் மைதானத்தில் அசத்துமா இந்தியா?

பேருந்தில் டிரைவரின் இருக்கைக்கு சென்றவர் தனது வெறித்தனத்தை தொடர்ந்தார். டிரைவர் சீட்டில் இருந்து கால்களை நீட்டி சத்தம்போட்டார். பேருந்தின் சீட்டுகளில் படுத்துக்கொண்டும் கூச்சலிட்டார். அவரது சேட்டையால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சம் காரணமாக கீழே இறங்கினர்.

கால்பந்து வீரர் நெய்மரின் தீவிர ரசிகன் என கூச்சலிட்ட ராஜேஷ்  பேருந்து அர்ஜென்டினாவின் நிறம் என்பதால்  தலையால் பந்தை தட்டி விளையாடும் பாணியில் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக அப்பகுதியில் கூடியிருந்தவர்களிடம் அந்த இளைஞர் கூறினார். கால்பந்து விளையாட்டில் அர்ஜென்டினா அணியின் தீவிர ரசிகரான இவர் மனநலம் பாதிப்பு காரணமாக இதுப்போன்ற செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அந்த நபரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.ராஜேஷ் சேட்டைகள் குறித்து தகவல் அறிந்து வந்த அவரது பெற்றோர் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீஸாரிடம் எடுத்துக்கூறினர். இதனையடுத்து அவரை கோழிக்கோட்டில் உள்ள மனநல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Football, Kerala, Neymar jr, Video