ஹோம் /நியூஸ் /இந்தியா /

கடனை செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள்: ஒரு மணி நேரத்தில் லாட்டரியில் ரூ.70 லட்சம் விழுந்து வங்கி அதிகாரிகளை கெஞ்ச வைத்த சம்பவம்...

கடனை செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள்: ஒரு மணி நேரத்தில் லாட்டரியில் ரூ.70 லட்சம் விழுந்து வங்கி அதிகாரிகளை கெஞ்ச வைத்த சம்பவம்...

லாட்டரியில் பரிசு பெற்ற பூங்குஞ்சு

லாட்டரியில் பரிசு பெற்ற பூங்குஞ்சு

லாட்டரியில் பணம் விழுந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சியில் எல்லைக்கே சென்ற பூஞ்குஞ்சு அங்கே துள்ளி குதித்துள்ளார். என்னை கடவுள் காப்பாற்றி விட்டார் கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

 கடன் செலுத்தாத நபரின் வீட்டை ஜப்தி செய்யும்போது வீட்டின் உரிமையாளருக்கு 70 லட்சம் ரூபாய் லாட்டரியில் விழுந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் மைனகாபள்ளி பகுதியை சேர்ந்தவர் பூங்குஞ்சு (40) ,மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்த இவர் தனது சொந்த நிலத்தில் வீடு கட்டுவதற்காக வங்கியில் 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ரூ. 2லட்சம் கடனை கட்டிய நிலையில் மீதமுள்ள தொகையை செலுத்த முடியாதநிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் கடன் தொகையை செலுத்ததால் பூங்குஞ்சுவின் வீட்டை வங்கி அதிகாரிகள் நேற்று முன் தினம் நோட்டீஸ் ஒட்டி விட்டு ஜப்தி செய்ய போவதாக மிரட்டியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பூங்குஞ்சு என்ன செய்வது என்று தெரியாமல் மன வருத்தத்தில் இருந்துள்ளார். அப்போழுது தான் அந்த அதிசயம் அரங்கேறியது. பூங்குஞ்சு கடந்த ஒரு மாதத்திற்கு முன் வாங்கிய அஜ்சயா AK570 என்னும் லட்டரியில் ரூ.70 லட்சம் பணம் விழுந்து இருப்பதாக ஏஜெண்டு போன் செய்து தெரிவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியில் எல்லைக்கே சென்ற பூஞ்குஞ்சு அங்கே துள்ளி குதித்துள்ளார். என்னை கடவுள் காப்பாற்றி விட்டார் கடவுளுக்கு நன்றி என கூறி ஆப்பரித்தார்.

இதையும் படிங்க: பத்ரிநாத், கேதார்நாத் ஆலயங்களில் முகேஷ் அம்பானி வழிபாடு

இதனையடுத்து கடனை கட்டாததால் பூங்குஞ்சுவை வசை பாடிக்கொண்டே வீட்டை ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகளே லட்டரியில் விழுந்த பணத்தை தங்கள் வங்கியில் டெபாசிட் செய்யுமாறு பூங்குஞ்சுவை கெஞ்சினர்.  அதிர்ஷ்டம் லாட்டரி வடிவில் வந்து வறுமைக்கு முற்றுப்புள்ளி வைத்த மகிழ்ச்சியோடு பரிசு கிடைத்த லாட்டரி டிக்கெட்டை பூக்குஞ்சு தனது வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்ற வங்கியிலேயே டெப்பாசிட் செய்தார். இதை அடுத்து வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்யும் முடிவை வாபஸ் பெற்று கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Kerala, Lottery