• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 10 ஆண்டுகள் ஒரே அறையில் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்ந்த காதல் ஜோடி முறைப்படி திருமணம்!

10 ஆண்டுகள் ஒரே அறையில் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்ந்த காதல் ஜோடி முறைப்படி திருமணம்!

காதல் ஜோடி

காதல் ஜோடி

தனது திருமணம் குறித்து ரஹ்மான் கூறுகையில் இனி மகிழ்ச்சியானதும், அமைதியானதுமாக ஒரு வாழ்க்கையை வாழ விரும்புவதாக தெரிவித்தார்.

  • Share this:
10 ஆண்டுகளாக, தனது வீட்டில் இருந்தவர்களுக்கு கூட தெரியாமல் வீட்டினுள் இருந்த அறை ஒன்றில் காதலியுடன் திரைமறை வாழ்க்கை நடத்தி வந்த காதலன் குறித்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது, கேரளாவைச் சேர்ந்த அந்த காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டுள்ளது.

11 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான 29 வயது பெண் ஒருவர் அவர் மாயமான அவருடைய வீட்டின் அருகிலேயே காதலனின் வீட்டில் உள்ளவர்கள் உட்பட யாருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தி வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சஜிதா (அப்போது அவருடைய வயது 18). பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு திடீரென சஜீதா மாயமாகிவிட இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பல இடங்களில் தேடியும் சஜிதாவை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவே இல்லை.

இந்நிலையில் சஜீதா 11 ஆண்டுகளாக அவரின் காதலனுடைய வீட்டில் ரகசியமாக ஒரு சிறிய அறைக்குள் மறைந்து வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. காதலுக்காக இப்படியும் கூட ஒரு பெண்ணால் இருக்க முடியுமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு சஜிதாவின் 11 ஆண்டுகால வாழ்க்கை இருந்துள்ளது. சஜிதா காதலன் ரஹ்மானின் வீட்டில் 11 ஆண்டுகளாக ஒரு அறைக்குள் ரகசியமாக குடும்பம் நடத்திய நிலையில் சஜிதா அந்த வீட்டில் இருந்தது ரஹ்மானின் குடும்பத்தினருக்கே தெரியாதது ஆச்சரியத்தின் உச்சமாகவே இருந்தது.

Also Read: ஒரே நாளில் ரூ.600 கோடிக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை; ஓலா நிறுவனம் புதிய புரட்சி!

கடந்த ஜூன் மாதம் ரஹ்மான் - சஜீதா ஜோடியின் 11 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் இந்த காதல் ஜோடியின் காதலுக்கு சஜீதாவின் வீட்டில் பச்சை கொடியும் காட்டப்பட்டது.

இந்நிலையில் ரஹ்மான் - சஜீதா ஜோடிக்கு தற்போது முறைப்படி திருமணம் நடைபெற்றிருக்கிறது. உள்ளூரில் உள்ள சப்-ரிஜிஸ்திரார் அலுவலகத்தில் வைத்து சிறப்பு திருமண சட்டத்தின் படி பதிவுத் திருமணம் நடந்துள்ளது. தங்களின் திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி ரஹ்மான் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Also Read:  மினி ஷார்ட்ஸ் அணிந்து நுழைவுத்தேர்வு எழுத வந்த மாணவிக்கு அனுமதி மறுப்பு!

தனது திருமணம் குறித்து ரஹ்மான் கூறுகையில் இனி மகிழ்ச்சியானதும், அமைதியானதுமாக ஒரு வாழ்க்கையை வாழ விரும்புவதாக தெரிவித்தார்.

சஜீதாவின் பெறோரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். ஆனால் ரஹ்மானின் பெற்றோரும், உறவினர்கள் யாரும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: