• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கேரளாவில் கல்லூரி வளாகத்தில்வைத்து மாணவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த காதலன்-ஓடாமல் அங்கேயே இருந்த விநோதம்

கேரளாவில் கல்லூரி வளாகத்தில்வைத்து மாணவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த காதலன்-ஓடாமல் அங்கேயே இருந்த விநோதம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கேரளாவில் கல்லூரி வளாகத்தில் வைத்து காதலியை கழுத்தை அறுத்து காதலன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு சமஉரிமை என்று தொடர்ந்து பேசிவரும் இந்த காலத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர் கதையாக நடைபெற்றுவருகின்றன. பெண் குழந்தைகள், இளம் பெண்கள் பலரும் நாள் தோறும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அல்லாமல் காதலிக்க மறுக்கும் பெண்களைக் கொலை செய்யும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன.

    2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. 2018-ம் ஆண்டு சென்னை கே.கே.நகர் பகுதியிலுள்ள மீனாட்சி கல்லூரியில் படித்தவந்த அஸ்வினி என்ற மாணவியை காதல் விவகாரத்தில் இளைஞர் குத்திக் கொலை செய்தார். அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை தாம்பரத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஸ்வேதாவை அவருடைய காதலன் ராமச்சந்திரன் குத்திக்கொலை செய்துகொண்டு தானும் தற்கொலை செய்ய முயன்றார்.

    காதல் விவகாரத்தில் பெண்களைக் கொலை செய்யும் போக்கு தொடர் கதையாக இருந்துவருகிறது. இந்தநிலையில், இதேபோன்றதொரு சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கேரளா மாநிலம் கோட்டயத்திலுள்ள தாமஸ் கல்லூரி வளாகத்தில் வைத்து 22 வயது பெண்ணும் அவருடைய சக மாணவரும் காதலரும் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அந்த இளைஞர் பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். அதனால், ரத்தம் வெளியேறி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அந்த உயிரிழந்தநிலையிலும் அந்த இளைஞர் அங்கிருந்து ஓடவில்லை. காவல்துறை வந்து அவரைக் கைது செய்யும் வரையில் அங்கேயே உட்கார்ந்திருந்துள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: