30 வயதாகியும் நோ கல்யாணம்... வரன்களை கெடுத்ததாக பக்கத்து கடையை ஜேசிபி கொண்டு இடித்து தள்ளிய இளைஞர்

30 வயதாகியும் திருமணம் ஆகாததால் கேரள இளைஞர் ஒருவர் தனது வீட்டின் அருகில் இருக்கும் கடையை ஜேசிபி கொண்டு இடித்துள்ளார்.

30 வயதாகியும் நோ கல்யாணம்... வரன்களை கெடுத்ததாக பக்கத்து கடையை ஜேசிபி கொண்டு இடித்து தள்ளிய இளைஞர்
ஆல்பின்மேத்யூ
  • Share this:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆல்பின் மேத்யூ . இவருக்கு வயது 30.  திருமணத்திற்காக வரன் தேடிக் கொண்டு உள்ளார். தனக்கு வரன் ஏதும் சரியாக அமையாததால் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடையின் மீது ஆல்பினுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

தனது வரன்களை கடையில் உள்ள நபர்கள் கெடுப்பதாக எண்ணி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதில், தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடையில் சூதாட்டம் ஆடுவதாகவும், குடித்து விட்டு தொந்தரவு தருவதாகவும் புகார் அளித்துள்ளார்.

 
 

இது தொடர்பாக கண்ணூர் நகராட்சிக்கும் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படததால் தானே பக்கத்து கடையை இடித்து தள்ள முடிவு செய்துள்ளார்.அதற்காக வாடகைக்கு ஜேசிபி ஒன்றை வாங்கி கடையை இடித்து தரைமட்டமாக்கியுள்ளார். இதையடுத்து ஆல்பினை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading