• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Religious Conversion: 2வது மனைவியை இஸ்லாமுக்கு கட்டாய மதமாற்றம் செய்துவிட்டனர்: கிறிஸ்துவ நபரின் பரபரப்பு குற்றச்சாட்டு!

Religious Conversion: 2வது மனைவியை இஸ்லாமுக்கு கட்டாய மதமாற்றம் செய்துவிட்டனர்: கிறிஸ்துவ நபரின் பரபரப்பு குற்றச்சாட்டு!

மாதிரி படம்

மாதிரி படம்

என் மனைவிக்கு 5 செண்ட் நிலம், 25 லட்ச ரூபாய் பணம் மற்றும் வீடு ஆகியவற்றை கொடுத்து கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்திருக்கின்றனர்.

  • Share this:
தன்னுடைய இரண்டாவது மனைவி மற்றும் 13 வயது மகனை, வீட்டுக்கு அருகில் வசிப்போர் சில முஸ்லிம் பெண்கள் கட்டாயப்படுத்தி இஸ்லாமுக்கு மதம் மாற்றியுள்ளதாக கேரளாவைச் சேர்ந்த ஒருவர் மாநில முதல்வருக்கும், மாவட்ட எஸ்பிக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் புகார் அனுப்பியிருப்பதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்கு புகார் அனுப்பிய நிலையில், தனக்கு ஆதரவாக இருப்பதற்கு மாறாக தன்னை கட்சியிலிருந்தே நீக்கிவிட்டதாக கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் உள்ள இரிட்டி பகுதியைச் சேர்ந்தவர் கில்பர்ட் (வயது 45), கார் ஓட்டுனராக பணியாற்றி வரும் கில்பர்ட், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும், அக்கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியூவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரு பிள்ளைகள் இருக்கும் நிலையில், தன்னுடைய மனைவியின் மூத்த சகோதரியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு தேன்கிபள்ளம் எனும் ஊருக்கு மாறுதலாகி சென்று அங்கு வசித்து வந்துள்ளார்.

Also Read:   ஃபேஸ்புக்கில் 'ஹா ஹா' எமோஜி பயன்படுத்துவது பாவம்: இஸ்லாமியர்கள் இதை செய்யக்கூடாது - இஸ்லாமிய மதகுரு

இவரின் மனைவிகள் இருவரும் கன்னூர் மாவட்டம் கோட்டியூரைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவரும் தன்னுடன் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக குடும்பம் நடத்திவருவதாகவும் கில்பர்ட் தெரிவித்தார். 19 ஆண்டுகளுக்கு முன்னர் தனது முதல் மனைவியை திருமணம் செய்து, 4 வருடங்கள் கழித்து அவருடைய 3 வயது மூத்த சகோதரியையும் திருமணம் செய்துகொண்டதாகவும் கில்பர்ட் கூறுகிறார்.

இருப்பினும் இரு குடுபங்களையும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் தனித்தனி வீட்டில் தங்கவைத்து குடும்பம் நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

Also Read:  ஆக்ஸிஜன் தேவையை 4 மடங்கு அதிகமாக காட்டிய டெல்லி அரசு! - 12 மாநில பாதிப்புக்கு காரணம் - உச்சநீதிமன்ற குழு

தொடர்ந்து பேசிய கில்பர்ட், “முதல் மனைவி இரு குழந்தைகளுடன் கோஹினூரிலும், 2வது மனைவி 13 வயது மகனுடன் நிரோல்பாலத்திலும் வசித்து வருகின்றனர். எனக்கு கடவுள் நம்பிக்கை பெரிதாக இல்லையென்றாலும் கூட என்னுடைய மனைவிகளும், குழந்தைகளும் கண்டோட்டியில் உள்ள தேவாலயத்திற்கு வழக்கமாக சென்று வருவார்கள்.

இந்த நிலையில் எனது இரண்டாவது மனைவி தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் வசிக்கும் இஸ்லாமியரான புஷ்ரா என்ற பெண்மணியுடன் என் மனைவி நல்ல முறையில் பழகி வந்தார். புஷ்ரா உட்பட சில முஸ்லிம் பெண்மணிகள் தந்த ஊக்கத்தின் காரணமாக 15 நாட்களுக்கு முன்னர் என் மனைவி இஸ்லாம் மதத்துக்கு மாறப்போவதாக தெரிவித்தார். நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன், இருப்பினும் அவரும், எனது மகனும் தற்போது இஸ்லாமுக்கு மாறிவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் மனைவிக்கு 5 செண்ட் நிலம், 25 லட்ச ரூபாய் பணம் மற்றும் வீடு ஆகியவற்றை கொடுத்து கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்திருக்கின்றனர்.

கட்டாய மதமாற்ற விவகாரம் குறித்து எடுத்துக்கூறி உதவுமாறு சிபிஎம் கட்சிக்கு தெரியப்படுத்தியபோதிலும் அவர்கள் எனக்கு உதவாமல் என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர் என்றார் கில்பர்ட். ஆனால் கில்பர்டின் ஒழுங்கீனம் காரணமாகவே அவரை கட்சியிலிருந்து நீக்கியதாக சிபிஎம் சார்பில் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: