Home /News /national /

பல் துலக்காமல் முத்தம் கொடுக்க வேண்டாம் என்ற மனைவியை வெட்டி கொன்ற கணவன்

பல் துலக்காமல் முத்தம் கொடுக்க வேண்டாம் என்ற மனைவியை வெட்டி கொன்ற கணவன்

மனைவி கொலை

மனைவி கொலை

குழந்தைக்கு நோய் தொற்று பரவக்கூடும் என எண்ணிய தீபிகா, பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்க கூடாது என அவினாஷை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவினாஷ் மனைவியை கத்தியால் குத்தி கொன்றார்.

கேரளாவில் குழந்தைக்கு பல் துலக்காமல் முத்தம் கொடுப்பதை கண்டித்ததால் மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கும் கோவையைச் சேர்ந்த  தீபிகா என்பவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. பெங்களூருவில் வேலை பார்த்து வந்த அவினாஷ், இரண்டு மாதங்களுக்கு முன் ஊர் திரும்பினார். அவினாஷ் பெங்களூரில் உள்ள விமானப்படைக்கான  சில பணிகள் ஒப்பந்த அடிப்படையில்  செய்து வரும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

தற்போது வொர்க் ஃபிரம் ஹோம் முறையில் வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவினாஷ் காலையில் எழுந்ததும் பல் துலக்காமலேயே தன் குழந்தைக்கு முத்தம் கொடுப்பதை பழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், குழந்தைக்கு நோய் தொற்று பரவக்கூடும் என எண்ணிய தீபிகா, பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்க கூடாது என அவினாஷை கண்டித்துள்ளார். நேற்று வழக்கம்போது அவினாஷ் குழந்தைக்கு முத்தம் கொடுத்தபோது தீபிகா கண்டித்துள்ளார். இதனால் தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமைக்கும் வரி.. ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல்

வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில்,  அவினாஷ் கத்தியால் தீபிகாவை குத்தியுள்ளார். இதில் தீபிகா பலத்த காயம் அடைந்தார்.  அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர், தீபிகாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும்,  மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே  அவர் உயிரிழந்தார்.  அவினாஷை  உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் தப்பி செல்லாமல் தடுத்து நிறுத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 
Published by:Murugesh M
First published:

Tags: Husband Wife, Kerala

அடுத்த செய்தி