ஹோம் /நியூஸ் /இந்தியா /

ச்சீ..ச்சீ.. 300க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பகங்களை தழுவியதாக பெருமை பேசி வசமாக மாட்டிக்கொண்ட இளைஞர்...

ச்சீ..ச்சீ.. 300க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பகங்களை தழுவியதாக பெருமை பேசி வசமாக மாட்டிக்கொண்ட இளைஞர்...

Groping

Groping

ரோட்டில் நடந்து செல்கிறீர்கள், திடீரென ஒருவர் உங்களின் மார்பகங்களை 2 நொடிகள் பற்றியிருக்கிறார். உங்களின் மார்பகங்களை யாரோ ஒருவர் தொட்டதையே உங்களால் உணர்ந்திருக்க முடியாது. அந்த யாரோ நானாக தான் இருக்க முடியும். இது நடந்தது 2012ம் ஆண்டு.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நண்பருடன் போட்டி போட்டுக்கொண்டு 300க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பகங்களை தொட்டு அநாகரிகமாக நடந்துகொண்டிருப்பதாக சமூக வலைத்தளத்தில் பெருமை பேசி வசமாக சிக்கியிருக்கிறார் இளைஞர் ஒருவர்.

பொதுஇடங்களில் செல்லும்போது, பெண்கள் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு எப்படியெல்லாம் அவஸ்தையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சரியான எடுத்துக்காட்டாகும். கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெருமை பேசி சுயதம்பட்டம் அடித்துக் கொண்டவற்றை கேட்கவே அருவருப்பாகவும், ஆத்திரமூட்டுவதாகவும் உள்ளது.

மருத்துவக் கல்லூரி மாணவரான அந்த இளைஞர், சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பகங்களை தொட்டு தவறாக நடந்து கொண்டிருப்பதாகவும், பார்க்கும் பெண்களின் மார்பகங்களை தொட்டு தான் செய்த அநாகரிகங்களை நண்பரிடம் பெருமை பேசிய ஸ்கிரீன்ஷாட்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

மீடூ இயக்கத்தில் மிக தீவிரமாக இருப்பவரும், பலரின் சுயரூபங்களை அம்பலப்படுத்திய பாடகி சின்மயி ஸ்ரீபிரதா, தற்போது கேரள இளைஞர் பேசிய ஸ்கீரீன்ஷாட்களை பகிர்ந்திருக்கிறார்.

அந்த இளைஞர் தனது நண்பர் (பெண்ணாக இருக்கலாம்) ஒருவருடன் இன்ஸ்டாவில் பேசியிருப்பவதாவது, “நான் 13 வயதை நிறைவு செய்த பின்னர் பெண்களின் மார்பகங்களை பிடிப்பவனாக மாறினேன். என்னுடைய வாழ்க்கையில் 300க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பகங்களை தழுவியிருக்கிறேன். 8 மணி நேரத்தில் 52 பெண்களின் மார்பகங்களை தழுவிய சாதனையும் இதில் அடங்கும். நானும் என் நெருங்கிய நண்பன் ஒருவரும் பெண்களின் மார்பகங்களை போட்டி போட்டுக் கொண்டு தழுவி வந்தோம். இதெல்லாம் 10 வருடங்களுக்கு முன் நடந்தது. யார் அதிக பேரிடம் இப்படி நடந்து கொள்கிறோம் என்பதை வைத்து தான் யார் பெரியவன் என எங்களுக்குள் பெருமை.

Also read:   தனுஷ் பட கேங்க்ஸ்டர் நடிகரின் காரை அடித்து நொறுக்கிய காங்கிரஸ் தொண்டர்கள்.. முக்கிய சாலையில் பரபரப்பு…

ரோட்டில் நடந்து செல்கிறீர்கள், திடீரென ஒருவர் உங்களின் மார்பகங்களை 2 நொடிகள் பற்றியிருக்கிறார். உங்களின் மார்பகங்களை யாரோ ஒருவர் தொட்டதையே உங்களால் உணர்ந்திருக்க முடியாது. அந்த யாரோ நானாக தான் இருக்க முடியும். இது நடந்தது 2012ம் ஆண்டு.

இவற்றையெல்லாம் நாங்கள் ஆசையின் பேரில் செய்ததில்லை. எல்லாம் ஒரு நகைச்சுவைக்காக செய்தது தான். பெரும்பாலும் எங்களுக்குள் போட்டி ஏற்பட்டால் நான் தான் அதில் சாம்பியன். அந்த அனுபவங்களுடன் இப்போதெல்லாம் நாங்கள் வளர்ந்துவிட்டோம்.” இவ்வாறு அந்த இளைஞர் பேசியிருக்கிறார்.

Also read:   சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாத பெற்றோர்கள்.. மூடநம்பிக்கையால் பறிபோன சிறுமியின் உயிர்..

சின்மயி வெளியிட்டுள்ள பதிவில், அந்த மாணவர் பேசிய பேச்சுக்கள் தொடர்பான இன்ஸ்டாகிராம் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்துள்ள அவர், “இவையெல்லாம் இன்ஸ்டாவில் நேற்று பகிரப்பட்டவை, இவற்றை படித்து ஜாக்கிரதையாக நடந்துகொள்ளுங்கள்.

சில பெண்களின் மார்பகங்களை சிலர் தவறுதலாக தொட்டுவிடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சிலர் போட்டிக்காக பெண்களின் மார்பகங்களை அநாகரிகமாக தொட்டு வருகிறார்கள். 300+ பெண்களைக் கொண்ட அவரது மார்பகங்களை பிடிக்கும் போட்டி அவருக்கு ஒரு விளையாட்டாக இருந்திருக்கிறது, அது பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சி என்பதை அவர் உணரவில்லை. தயவு செய்து உங்கள் மகன்களை சரியாக வளர்த்திடுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

Published by:Arun
First published:

Tags: Chinmayi sripaada