முகப்பு /செய்தி /இந்தியா / நீ வேலைக்கு போறது பிடிக்கல.. காதல் மனைவியை கொடூரமாக தாக்கி செல்ஃபி எடுத்த கணவன் - அதிர்ச்சி சம்பவம்

நீ வேலைக்கு போறது பிடிக்கல.. காதல் மனைவியை கொடூரமாக தாக்கி செல்ஃபி எடுத்த கணவன் - அதிர்ச்சி சம்பவம்

வேலைக்கு செல்லும் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவர் கைது

வேலைக்கு செல்லும் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவர் கைது

குடும்பத்தில் கடன் அதிகரிக்கவே, கடன் சுமையை தீர்க்கவும் குழந்தைகளை வளர்க்கவும் மனைவி ஆதிரா அருகே உள்ள சூப்பர்மார்க்கெட் ஒன்றில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

  • Last Updated :
  • Kerala, India

குடும்ப கடனை அடைக்க வேலைக்கு சென்ற மனைவியை ரத்தம் வரும் அளவிற்கு அடித்து தாக்கிய கணவர் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மலையன்கீவு பகுதியில் வசிக்கும் 27 வயது நபர் திலீப். இவருக்கு 24 வயதில் ஆதிரா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். திலீப்பும், ஆதிராவுக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளனர். இருவரும் பெற்றோரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்ததால் உறவினர் இன்றி தனியே வசித்து வந்துள்ளனர். மது போதைக்கு அடிமையான கணவர் திலீப் குடும்பத்தை சரிவர கவனித்து பார்ப்பதில்லை.

குடும்பத்தில் கடன் அதிகரிக்கவே, கடன் சுமையை தீர்க்கவும் குழந்தைகளை வளர்க்கவும் மனைவி ஆதிரா அருகே உள்ள சூப்பர்மார்க்கெட் ஒன்றில் வேலைக்கு சென்று வந்துள்ளார். தன் மனைவி வேலைக்கு சென்று சம்பாதிப்பது கணவர் திலீப்பிற்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி பயங்கர குடிபோதையில் வீட்டிற்கு வந்த திலீப் ஆத்திரத்துடன் மனைவியை கடுமையாக அடித்து தாக்கியுள்ளார்.  இதன்காரணமாக ஆதிராவின் முகத்தில் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் நிற்காமல் வலி தாங்காமல் துடித்து அழும் மனைவியுடன் செல்பி வீடியோ எடுத்த கணவர், நான் போதையில் இருந்தாலும் நியாயமான காரியத்தை தான் செய்கிறேன் என்றுள்ளார்.

இதையும் படிங்க: ஓசி ஏர்கூலரில் ஒய்யார தூக்கம்.. அடம்பிடித்த நபருக்கு அடி உதை கொடுத்த பெண் - வைரல் வீடியோ

top videos

    அந்த வீடியோவில் அழுத குரலில் பேசும் மனைவி ஆதிரா, "என் கணவர் சம்பாதித்து பணம் தந்து கடனை அடைத்தால் நான் வேலையை விட்டுவிட்டு வீட்டில் குழந்தைகளை பார்த்துக்கொள்வேன். நான் வேலைக்கு செல்லவில்லை என்றால் குழந்தைகள் பட்டினி தான் கிடப்பார்கள்" என்று தழுதழுக்க பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், திலீப் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறை கைது செய்துள்ளது.

    First published:

    Tags: Crime News, Domestic Violence, Husband Wife, Viral Video, Wife compliant