முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்...! 67 வயது மணமகனுக்கும் 65 வயது மணப்பெண்ணுக்கும் திருமணம் - வீடியோ

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்...! 67 வயது மணமகனுக்கும் 65 வயது மணப்பெண்ணுக்கும் திருமணம் - வீடியோ
News18
  • News18
  • Last Updated: December 29, 2019, 2:49 PM IST
  • Share this:
கேரளாவில் முதியோர் இல்லத்தில் காதலித்த 67 வயதான கோச்சானியன் என்பவரும், 65 வயதான லட்சுமி அம்மாள் என்பவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருச்சூர் மாவட்டம் ராமாவர்மபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடந்த இந்த திருமணத்தில் வேளாண்துறை அமைச்சர் சுனில் குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

லட்சுமி அம்மாளின் கணவரிடம் கோச்சானியான் உதவியாளராக இருந்துள்ளார். 21 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்த பின்பு லட்சுமி அம்மாள் உறவினர்களுடன் சென்றுவிட்டார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ராமாவர்மபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் லட்சுமி அம்மாள் சேர்ந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு அங்கு கோச்சானியானும் சேர்க்கப்பட்டுள்ளார்.
அப்போது சந்தித்துப் பழகிய இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்த நிலையில் தற்போது மணம் முடித்துள்ளனர். எவ்வளவு நாட்கள் ஒன்றாக வாழ்வோம் என தெரியாவிட்டாலும், வாழும் நாள் வரை மகிழ்ச்சியாக வாழ்வோம் என புதுமணப் பெண் லட்சுமி அம்மாள் தெரிவித்துள்ளார்.

Also See...
First published: December 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்