கேரளாவில் திடீரென சரிந்துவிழுந்த பார்வையாளர் கேலரி.. அதிர்ச்சி வீடியோ
கேரளாவில் திடீரென சரிந்துவிழுந்த பார்வையாளர் கேலரி.. அதிர்ச்சி வீடியோ
விபத்து
கால்பந்து போட்டியை காண அதிகளவுபார்வையாளர்கள் குவிந்தனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அமர்ந்ததால் தற்காலிக கேலரி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் காளி காவு பகுதியில் கால்பந்து போட்டி நடைபெற்று வந்த மைதானத்தின் தாற்காலிக பார்வையாளர் கூடம் திடீரென சரிந்து விழுந்தது. இதில், சுமார் 250 பேர் காயமடைந்தனர்.
கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம் காளிகாவு பகுதியில் பூங்கோடு LP பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய செவன்ஸ் கால்பந்து போட்டி டோர்னமெண்டின் இறுதி போட்டி ஆனது நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது இரவு 9.30 மணி அளவில் தாற்காலிக கேலரி சரிந்து விழுந்து விட்டது ஏற்பட்டது.
இந்த கேலரி மூங்கில் , பாக்குமரம் போன்றவற்றால் தாற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தது. இரவு போட்டி துவங்கும் போது ஏராளமான பார்வையாளர்கள் குவிந்தனர். இந்நிலையில் நிர்வாகிகள் இங்கு வந்த ரசிகர்கள் அனைவருக்குமே தலா 100 ரூபாய் டிக்கெட் வழங்கி போட்டியை காண அனுமதித்தனர். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் ஆட்களை அனுமதித்ததால் பாரம் தாங்காமல் தாற்காலிக கேலரி சரிந்து விபத்து ஏற்பட்டது.
#WATCH Temporary gallery collapsed during a football match in Poongod at Malappuram yesterday; Police say around 200 people suffered injuries including five with serious injuries#Keralapic.twitter.com/MPlTMPFqxV
இந்த விபத்தில் 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து வண்டூர், நிலம்பூர், மஞ்சேரி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளன்ர். 15 க்கும் மேற்பட்டோர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. 3 பேர் படுகாயம் அடைந்தனர். உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போட்டியை நடத்திய நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Murugesh M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.