Home /News /national /

அரசுத் தேர்வில் ஒன்றாக தேர்ச்சியடைந்த தாய், மகன்.. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்

அரசுத் தேர்வில் ஒன்றாக தேர்ச்சியடைந்த தாய், மகன்.. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்

பிந்து மற்றும் விவேக்

பிந்து மற்றும் விவேக்

நாங்கள் இருவரும் ஒன்றாகப் படித்தோம். ஆனால் ஒன்றாகத் தகுதி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. வென்றதில் நாங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என தாயும் மகனும் கூறுகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala | Malappuram
கேரளாவில் உள்ள மலப்புரம் தொடர்ந்து கல்வி சார்ந்தத் தலைப்புச் செய்திகளில் வந்து கொண்டிருக்கிறது.  ராமாயண வினாடிவினா போட்டியில் வென்ற இஸ்லாமிய மாணவர்களின் செய்தியை அடுத்து இப்போது ஒரு புதிய வரவு..

மலப்புரத்தைச் சேர்ந்த அம்மா, மகன் இருவருமே கேரள மாநிலத்தின் அரசு பணியாளர் தேர்வில் ஒரே நேரத்தில் வெற்றி வாகை சூட்டியுள்ளனர். பிந்து தனது 42 வயதில் கேரள அரசுப் பணியாளர் தேர்வாணைய (பிஎஸ்சி) தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதோடு, அவரது 24 வயது மகன் விவேக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஒரே நேரத்தில் இருவரும் அரசுப்  பணியில் சேர உள்ளனர்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்பட்ட கேரள பிஎஸ்சி முடிவுகளின்படி, விவேக் லோயர் டிவிஷனல் கிளார்க் (எல்டிசி) தேர்வில் தர வரிசைப் பட்டியலில் 38 வது இடம் பிடித்துத் தேர்ச்சி பெற்றார். அதே நேரத்தில் பிந்து கேரள மாநில சேவை கமிஷனின் கடைசி கிரேடு சர்வண்ட்ஸ் (எல்ஜிஎஸ்) தேர்வில் 92 இடம் பெற்றார்.

அஞ்சல் துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு.. தபால் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

“நாங்கள் ஒன்றாக பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டோம். அப்பா எங்களுக்கு எல்லா வசதிகளையும் ஏற்பாடு செய்தார். எங்கள் ஆசிரியர்களிடமிருந்து எங்களுக்கு நிறைய ஊக்கம் கிடைத்தது. நாங்கள் இருவரும் ஒன்றாகப் படித்தோம். ஆனால் ஒன்றாகத் தகுதி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. வென்றதில் நாங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்,” என்றார் விவேக்.

விவேக் 10 ஆம் வகுப்பில் இருந்தபோது, ​​​​பிந்து அவரை ஊக்கப்படுத்த புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார். அது பிந்துவை கேரள PSC தேர்வுகளுக்குத் தயாராகத் தூண்டியது. ஒன்பது வருடங்களாக சேர்ந்து பயில்கின்றனர். முந்தைய தேர்வுகளில் தோல்வியே கண்ட பிந்து தன் மகனோடு சேர்ந்து படித்து இப்போது தேர்ச்சிபெற்றுள்ளார்.


அங்கன்வாடி ஆசிரியையாக பணிபுரியும் பிந்து, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று படித்துள்ளார். அவர் ICDS (Integrated Child Development Services (ICDS) மேற்பார்வையாளர் தேர்வை இலக்காகக் கொண்டு படிக்கும்போது இந்த LGS தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பெண் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வில் வயது வரம்பு ஸ்ட்ரீம்-2 பதவிகளுக்கு 40 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், சில பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வயது விலக்கு மூலம் பிந்து தேர்வெழுதி வென்றுள்ளார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Government jobs, Job, Kerala

அடுத்த செய்தி