Home /News /national /

கடைசி நேரத்தில் வாங்கிய லாட்டரி மூலம் கோடீஸ்வரர் ஆன பெயிண்டர்

கடைசி நேரத்தில் வாங்கிய லாட்டரி மூலம் கோடீஸ்வரர் ஆன பெயிண்டர்

கேரளா லாட்டரி

கேரளா லாட்டரி

பெயிண்டிங் தொழில் செய்துவரும் சதானந்தம், காலையில் இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது, லாட்டரி சீட்டையும் அவர் வாங்கிவந்துள்ளார். பிற்பகலில் குலுக்கல் முடிவில் அவர் வாங்கிய லாட்டரிக்கு பம்பர் பரிசு விழுந்துள்ளது.

    கேரளாவில் பெயிண்டர் தொழிலாளி ஒருவருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பம்பர் பரிசு  விழுந்தது. குலுக்கல் நடைபெறும் நாளான்று காலையில்தான் லாட்டரியை வாங்கியதாகவும் பம்பர் பரிசு விழுந்துள்ளது மகிழ்ச்சியை தருவதாகவும் பெயிண்டர் சதானந்தம் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அரசு அனுமதியுடன் நடைபெற்று வருகிறது. ஓனம், புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகை தினங்களில் மெகா பம்பர் பரிசுக்கான லாட்டரி சீட்டை கேரள அரசு விற்பனை செய்வது வழக்கம்.

    அதன்படி, கிறிஸ்துமஸ்- புத்தாண்டை ஒட்டி ரூ.12 கோடி பரிசுத்தொகை கொண்ட கேரள அரசின் லாட்டரி விற்பனை செய்யப்பட்டது.  சீட்டு ஒன்று ரூ.300 க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த லாட்டரி டிக்கெட்டின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.முதலில் 24 லட்சம் லாட்டரி சீட்டுக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட நிலையில், அனைத்தும் விற்று தீர்ந்ததால், கூடுதல் லாட்டரிகள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

    முதல் பரிசாக ரூ.12 கோடியும் (ஒரு நபருக்கு) 2வது பரிசாக ரூ.3 கோடி (6 லாட்டரிகளுக்கு) 3வது பரிசாக 60 லட்சம் (6 லாட்டரிகளுக்கு) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: ஆட்டுக்கு பதிலாக ஆடு பிடித்திருந்தவர் தலையை வெட்டிய ‘மது போதை’ ஆசாமி


    முதலில் 24 லட்சம் லாட்டரி சீட்டுக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட நிலையில், அனைத்தும் விற்று தீர்ந்ததால், கூடுதல் லாட்டரிகள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்தன.  பம்பர் பரிசு பெறும் லாட்டரி டிக்கெட்டின் எண் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, XG 218582 என்ற எண் வரிசை கொண்ட லாட்டரி டிக்கெட்டுக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்தது.

    இந்த லாட்டரியை கோட்டயம் மாவட்டம் ஆய்மனம் பகுதியைச் சேர்ந்த சதானந்தம் என்பவர் வாங்கி இருந்தார். பெயிண்டிங் தொழில் செய்துவரும் சதானந்தம், காலையில் இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது, லாட்டரி சீட்டையும் அவர் வாங்கிவந்துள்ளார். பிற்பகலில் குலுக்கல் முடிவில் அவர் வாங்கிய லாட்டரிக்கு பம்பர் பரிசு விழுந்துள்ளது.

    மேலும் படிங்க: புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை நிறுத்தம்


    இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், தனது கடன்களை அடைத்தது போக மீத தொகையை தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செலவிடப் போவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஓனம் பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்ட லாட்டரியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு 12 கோடி ரூபாய் பரிசு அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Kerala, Lottery

    அடுத்த செய்தி