முகப்பு /செய்தி /இந்தியா / தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

கவிழ்ந்து கிடக்கும் லாரி

கவிழ்ந்து கிடக்கும் லாரி

Kerala Lorry Accident : கேரளா பத்தனம்திட்டா மாவட்டம் கைப்பட்டூரில் சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து மீது மோதிய விபத்தில் 25 பேருக்கு காயம் ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், கைப்பட்டூர் என்ற பகுதியில் இன்று காலை 10 மணிக்கு சிமெண்ட் கலவை ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. சாலையில் சென்றுக்கொண்டிருந்த லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர்ப்புறம் வந்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மோதியது. இதில் தனியார் பேருந்தும் லாரியும் எதிர் எதிர் திசையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் தனியார் பயணம் செய்த 25 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பத்தனம்திட்டா அரசு பொது மருத்துவமனை,  அடூர் தாலுகா மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பத்தில் காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Also Read: குடும்பத்தையே சரமாரியாக வெட்டிய பெண்.. 2மாத குழந்தை மற்றும் பாட்டி பரிதாபமாக உயிரிழப்பு - காரைக்காலில் பயங்கரம்

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான வாகனத்தை போலீஸார் அப்புறப்படுத்தினர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  லாரி ஓட்டுனரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

சாலையின் வளைவில் அதிவேகமாக வந்ததாலும் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Accident, Crime News, Kerala, Tamil News