ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேரளாவில் சுழன்றடிக்கும் கொரோனா: ஒரே நாளில் 38,670 பேருக்கு தொற்று உறுதி!

கேரளாவில் சுழன்றடிக்கும் கொரோனா: ஒரே நாளில் 38,670 பேருக்கு தொற்று உறுதி!

கேரளாவில் சுழன்றடிக்கும் கொரோனா

கேரளாவில் சுழன்றடிக்கும் கொரோனா

கேரளாவின் கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் 25% ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 38,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அண்டை மாநிலமான கேரளா, கொரோனாவின் முதல் அலையை வெகுவாக கட்டுப்படுத்தி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தபோது கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்தது. இதனிடையே கடந்த பிப்ரவரி மாத மத்தியில் இருந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்து தற்போது அசுர பாய்சலில் அனைத்து மாநிலங்களிலும் தனது பிடியை இறுக்கியுள்ளது.

கேரள மாநிலத்தில் நேற்று அதிகளவாக 35,000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று புதிய உச்சமாக 38,670 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,670 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 48 பேர் நோய்த்தொற்றினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பாதிப்பு, உயிரிழப்பு என இரண்டிலுமே இன்று கேரளா புதிய உச்சத்தை சந்தித்துள்ளது.

இதே போல கடந்த 24 மணி நேரத்தில் 21,116 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கின்றனர். கேரளாவில் அதிகபட்சமாக எர்னாகுளம் மாவட்டத்தில் இன்று 5,369 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு 15 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 5,000ஐயும் கடந்துள்ளது. அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2.70 லட்சமாக அதிகரித்துள்ளது.

கேரளாவில் நீலாம்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மரணம்!

இதனிடையே கேரளாவின் கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் 25% ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 3.79 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்காக சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 லட்சமாக அதிகரித்துள்ளது. அதே போல இந்தியாவில் ஒரே நாளில் 3,645 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2,04,832 ஆக உயர்ந்தது.

Published by:Arun
First published:

Tags: COVID-19 Second Wave, Kerala