கேரள உள்ளாட்சித் தேர்தல்: 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்

கேரள உள்ளாட்சித் தேர்தல்: 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்

வாக்கு போட காத்திருந்த மக்கள் கோப்புப் படம்

கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, மிகுந்த பாதுபாப்புடன் நடைபெற்று வருகிறது.

 • Share this:
  கொரோனா தொற்றின் தீவிரத்துக்கு இடையே, கேரளாவில் 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள் உட்பட கிராம பஞ்சாயத்துகளுக்கு மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கடைசிக் கட்ட வாக்குப்பதிவு கடந்த 14-ம் தேதி நடந்து முடிந்தது. அத்துடன் மூன்று கட்ட தேர்தல்களில் சேர்த்து மொத்தம் 76 சதவீத வாக்குகள் பதிவாகின. கேரள உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை, ஆளும் இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

  இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகியது. இதையொட்டி, வாக்குகள் எண்ணப்படும் 244 மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரளாவில், இதுவரை இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் இடையே இருமுனை போட்டியே நிலவி வந்தது.

  மேலும் படிக்க...BREAKING | புதிய ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..

  ஆனால், தற்போது பாஜக தெலங்கானா உள்ளாட்சித் தேர்தல் போன்று கணிசமான வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், 5 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக-வுக்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, என்பது பேரவைத் தேர்தலுக்கான ஒத்திகையாகவும் பார்க்கப்படுகிறது.

  இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஆளும் இடது சாரி கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: