ஹோம் /நியூஸ் /இந்தியா /

சினிமா எடுக்கப்போறேன்.. காதல் கணவனின் வரதட்சணை கொடுமை - கேரள சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை

சினிமா எடுக்கப்போறேன்.. காதல் கணவனின் வரதட்சணை கொடுமை - கேரள சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை

வரதட்சணை கொடுமை மனஉளைச்சல் காரணமாக கேரளாவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

வரதட்சணை கொடுமை மனஉளைச்சல் காரணமாக கேரளாவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

வரதட்சணை கொடுமை மனஉளைச்சல் காரணமாக கேரளாவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

  • 3 minute read
  • Last Updated :

வரதட்சனை கொடுமையால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘சுஹைல் நல்லவன் கிடையாது அப்பா நீங்க சொன்னது சரி..’ வரதட்சனை கொடுமையின் காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட இளம்பெண் மோபியா பர்வீன் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம்.

கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் மோபியா பர்வீன் சட்டக்கல்லூரி மாணவி. தொடுபுழாவில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவருக்கு பேஸ்புக் மூலம் முகமது சுஹைல் என்பவர் பழக்கமானார். முகநூல் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. சுஹைல் முகநூல் மூலம் பர்வீனுக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே பர்வீனை பெண் கேட்டுள்ளார். இடைதரகர் மூலம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. அதன்பின்னரே முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது.

இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் நடந்துள்ளது. சுஹைல் தான் வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக பர்வீன் தந்தை மற்றும் அவரது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் வெளிநாடு சென்றுவிடுவோம் எனக் கூறியுள்ளார்.

மொபியா ஃப்ரீலான்ஸ் டிசைனராக வருமானம் ஈட்டி வந்துள்ளார். திருமணம் முடிந்த சில நாளில் சுஹைல் மொபியாவிடம் நான் ஒரு படம் எடுக்க விரும்புகிறேன். அதற்காக ரூ40 லட்சம் தேவைப்படுகிறது. நீ உன் வீட்டில் வாங்கிக் கொடு எனக் கேட்டுள்ளார். வரதட்சணை கேட்டு பெறுவதில் விருப்பம் இல்லாத பர்வீன் மொபியா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Also Read:  மகனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்த தந்தை.. ராஜஸ்தானில் நடந்த கொடூரம்

அதன் பின்னர் காதலன் சுஹைலின் உண்மை முகம் பர்வீன் மொபியாவுக்கு தெரியவந்துள்ளது. வெளிநாட்டு வேலை என சுஹைல் கூறியது அனைத்தும் பொய் என்றும் பர்வீன் வருமானத்தில் சுஹைல் காலம் தள்ளிவந்தது தெரியவந்தது.

வரதட்சனை கேட்டு துன்புறுத்த தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களின் கொடுமையை தாங்க முடியாமல் ஆலுவா போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக விசாரிக்குமாறு ஆலுவா போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆலுவா காவல் நிலையத்தின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுதிர் என்பவர் நவம்பர் 22ஆம் தேதி பர்வீன் குடும்பத்தினரையும், சுஹைலின் குடும்பத்தினரையும் அழைத்துள்ளார். அப்போது சுஹைல், அவரது தந்தை, தாய் ஆகியோர் காவல்நிலையம் வந்துள்ளனர். சுஹைல் பர்வீன் குடும்பத்தினரை கடுமையான சொற்களால் பேசியுள்ளார்.

இதனால் கோபப்பட்ட பர்வீன் சுஹைலை அறைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுதிர்  மிக கடுமையாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அந்தப்பெண் மன உளைச்சலில் இருந்துள்ளார். காவல்நிலையத்தில் இருந்து வீட்டுக்கு மிகவும் மவுனமாக வந்துள்ளார். வீட்டிற்கு வந்தும் அமைதியாகவே இருந்துள்ளார். சில மணி நேரங்களில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

அவர் எழுதியிருந்த கடிதத்தில், “எனது சாவுக்கு கணவர் சுஹைல், அவரது பெற்றோர் யூசூப்- ருகியா, ஆலுவா போலீஸ் நிலைய  இன்ஸ்பெக்டர் சுதிர் ஆகியோர் தான் காரணம். அப்பா நீங்கள் சொன்னது சரி. சுஹைல் நல்லவன் கிடையாது” என எழுதியிருந்தார். இதையடுத்து அன்றைய தினம் முகமது சுஹைல் மற்றும் அவரது பெற்றோரை கோத்தமங்கலம் போலீஸ் கைது செய்தனர்.

Also Read: நட்சத்திர ஹோட்டலில் விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை.. கடிதத்தில் எழுதியிருந்தது என்ன?

இன்ஸ்பெக்டர் சுதிர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்திற்கு வெளியே போராட்டங்கள் நடந்தன. காவல் அதிகாரில் சுதிர்  இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்தது, மற்றும் பர்வீனை அவமதிக்கும் விதமாக நடந்துக்கொண்டுள்ளார். இதனை அந்தப்பெண் குறிப்பிட்டுள்ளார். எனவே காவல் அதிகாரியின் பெயரையும் இந்த வழக்கில் சேர்க்கப்படவேண்டும் அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என இளம்பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டம் நடத்தினர்.

தொடர் போராட்டம் காரணமாக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கேரளா இளம்பெண் உத்ராவின் கொலை வழக்கு விசாரணையின்போது  இந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆரம்ப கட்ட விசாரணையில் அலட்சியமாக இருந்தது தொடர்பாக இவரது குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அவர் அன்சல் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

-----------------------------------------------------------------------------------------------

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published: