அவ்ளோ கண்டிப்பான பழங்குடியின கிராமத்துக்குள்ளேயே கொரோனா பரவியது எப்படி?: குழம்பும் அதிகாரிகள்!

கேரளா,

கடந்த 16 நாட்களுக்கு முன் யூடியூபரான சுஜித் பக்தன் யாரும் செல்லமுடியாமல் இருந்த இந்த பகுதிக்கு இடுக்கி எம்.பி டீன் குரியக்கோஸ் உடன் சென்று வந்தார். வனத்துறையினரிடமிருந்து உரிய அனுமதி இல்லாமல் இவர்கள் சென்று வந்ததாக சர்ச்சை எழுந்தது.

  • Share this:
கொரோனா வைரஸால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாதிக்கப்படாத கிராம பஞ்சாயத்து என பெருமை பெற்ற, பழங்குடியினர் வசித்து வரும் கிராமங்கள் சிலவற்றில் முதல் முறையாக இருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. யாருமே நுழைய முடியாத கடுமையான கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வந்த அந்த கிராம பஞ்சாயத்திற்குள் சமீபத்தில் எம்.பி ஒருவருடன், யூடியூபர் சென்று வந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கிராம மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் நாடே கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் கொரோனாவை தூர நிறுத்தி வைத்திருந்தது கேரள மாநிலத்தின் தமிழக எல்லையில் அமைந்துள்ள பழங்குடியினர் வசித்து வரும் எடமலைக்குடி பஞ்சாயத்து கிராமங்கள்.

Also Read:   ₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்... ஏமாந்து போன வாடிக்கையாளர்கள்!

இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள எடமலைக்குடி பஞ்சாயத்து கிராமங்களில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்து வந்தது, இந்நிலையில் அங்கு இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 40 வயதாகும் பெண் மற்றும் 24 வயதாகும் இளைஞர் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மூணாறில் ஒருவரும், கோட்டயம் அரசு மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இவ்விருவருக்கும் யாரிடமிருந்து கொரோனா பரவியது என கண்டறியப்படவில்லை.

Also Read:   விண்வெளிக்கு செல்லும் இங்கிலாந்தின் பெரும் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சனுக்கும் கடலூருக்கும் என்ன தொடர்பு?

முதல் அலை கொரோனா பாதிப்பின் போதிலிருந்தே இக்கிராம பஞ்சாயத்து தங்களை வெளி உலகின் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டது. அங்கிருந்து யாரேனும் வெளியே அத்யாவசிய பொருட்கள் வாங்க சென்றால், 14 நாட்கள் சுயதனிமையில் இருந்தாக வேண்டும். மக்கள் பிரதிநிதிகளை தவிர்த்து பிறர் யாராக இருந்தாலும் வனத்துறையினரின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் இப்படி கடுமையான கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், கடந்த 16 நாட்களுக்கு முன் யூடியூபரான சுஜித் பக்தன் யாரும் செல்லமுடியாமல் இருந்த இந்த பகுதிக்கு இடுக்கி எம்.பி டீன் குரியக்கோஸ் உடன் சென்று வந்தார். வனத்துறையினரிடமிருந்து உரிய அனுமதி இல்லாமல் இவர்கள் சென்று வந்ததாக சர்ச்சை எழுந்தது. இவர்களின் வருகைக்கு பின்னர் தான் அக்கிராமத்தினர் இருவருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. அதிகாரிகள் இதனால் குழப்பமடைந்துள்ளனர்.
Published by:Arun
First published: