கேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு

கேரள மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளது.

கேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு
கேரள நிலச்சரிவு
  • Share this:
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அடுத்த ராஜமலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த 6ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 80க்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், இதுவரை 48 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இறந்தவர்களில் பெரும்பாலும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து 5வது நாளாக நடைபெற்றன. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை வைத்து கயத்தாறில் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Also read: சென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு


முன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீட்பு பணிகளில் தமிழக அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
First published: August 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading