முகப்பு /செய்தி /இந்தியா / கோவில் விழாவில் மிரண்டு ஓடிய யானை - அலறி அடித்து ஓட்டம் பிடித்த மக்கள்- கேரளாவில் பரபரப்பு

கோவில் விழாவில் மிரண்டு ஓடிய யானை - அலறி அடித்து ஓட்டம் பிடித்த மக்கள்- கேரளாவில் பரபரப்பு

கோவில் விழாவில் யானை மிரண்டு ஓட்டம்

கோவில் விழாவில் யானை மிரண்டு ஓட்டம்

Kerala Kuramba Bhagwati Amman Temple Elephant | யானை மிரண்டதால் அரை மணி நேரத்திற்கு மேலாக தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரள மாநிலம் பாலக்காடு அருகே கோயில் விழாவில் யானை மிரண்டதால் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு  ஓடியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே புதுச்சேரி பகுதியில் அமைந்துள்ள குறும்ப பகவதி அம்மன் கோயில் விழாவில் நேற்று இரவு யானை மீது சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திடீரென யானை மிரண்டு பாலக்காடு- எர்ணாகுளம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு இடையே ஓடியது.

இதனால் அப்பகுதி பரபரப்பான நிலையில் கோயில் விழாவுக்கு திரண்டு இருந்த மக்கள் 4 திசைகளிலும் சிதறி அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் ஒரு மணி நேரம் மிரண்டு அங்கும் இங்குமாக யானை ஓடிய பின்பு அதன் பாகங்கள் யானையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அந்த பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சமீப காலமாக கோயில் விழாக்கள் பங்கேற்கும் யானை மிரண்டு மக்களை பதற்றத்திற்கு உள்ளாக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.

First published:

Tags: Elephant, Kerala