முகப்பு /செய்தி /இந்தியா / ஊருக்குள் புகுந்த கொம்பன்.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்... கேரளாவில் பயங்கரம்

ஊருக்குள் புகுந்த கொம்பன்.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்... கேரளாவில் பயங்கரம்

ஊருக்குள் புகுந்த காட்டுயானை

ஊருக்குள் புகுந்த காட்டுயானை

ஏற்கனவே படையப்பா என்னும் யானை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது கொம்பன் யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala | Tamil Nadu

கேரளாவில் குடியிருப்பு பகுதியில் புகுந்த கொம்பன் என்ற காட்டுயானையை கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கேரளா மாநிலம் பழைய மூணாறு பகுதியில்  தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் இன்று காலை திடீரென கொம்பன் எனப்படும் காட்டு யானை ஒன்று வீதியில் சர்வ சாதாரணமாக உலா வந்தது.

யானை வருவதை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் சிலர் வீட்டை பூட்டிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே தஞ்சம் புகுந்தனர்.

பொதுமக்களின் அலறல் சத்தத்தை கேட்ட யானை, அவர்களை விரட்ட தொடங்கியது. இதனை கண்ட மக்கள், கூட்டம் கூட்டமாக அலறி கொண்டே ஓடினர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க | காதலிக்கு பிறந்தநாள் கிஃப்ட்.. மதில் ஏறிக்குதித்து நாய்க்குட்டி திருடிய காதலன்!

இதற்கிடையே யானை, காட்டில் இருந்து ஊருக்குள் புகுந்து ஆற்றில் உல்லாசமாக குளித்து விட்டு காட்டுக்குள் திரும்பி செல்லும் காட்சிகளும் வெளியாகி உள்ளது. மூணாறில் ஒருபுறம் படையப்பா என்னும் காட்டு யானை அட்டகாசம் செய்து வரும் நிலையில் தற்போது கொம்பன் என்னும் காட்டு யானை ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

First published:

Tags: Elephant, Kerala, Viral Video