முகப்பு /செய்தி /இந்தியா / ஓவர் ஸ்பீடில் முந்திய அரசுப்பேருந்து.. சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

ஓவர் ஸ்பீடில் முந்திய அரசுப்பேருந்து.. சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

சாலை விபத்து

சாலை விபத்து

Kerala Kollam College Student Accident | பேருந்தின் அதிவேகமும் ஓட்டுனரின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக விபத்தை பார்த்த பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் .

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கொல்லத்தில் அதிவேகத்தில் முந்த முயன்ற கேரள அரசு பேருந்தால் விபத்தில் சிக்கிய உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலம் பகுதியில் வைத்து கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரளா அரசு அதிவேக பேருந்து ஒன்று முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது வாகனத்தின் பின்பகுதி மோதியதில் பைக்கில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவரும் கல்லூரி மாணவரும் பேருந்தின் அடியில் சிக்கி உயிரிழந்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் புனலூர் பகுதியை சார்ந்த பிரஜித் மற்றும் சிகா என்பதும் தெரிய வந்துள்ளது. பேருந்தின் அதிவேகமும் ஓட்டுனரின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக விபத்தை பார்த்த பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் .

சிகா என்ற கல்லூரி மாணவியின் தலை மீதாக பேருந்தின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படு காயமடைந்த  கல்லூரி மாணவரும் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.  இந்த விபத்து குறித்து சடையமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .இந்த நிலையில் விபத்தின் அந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: CCTV, Kerala