ஹோம் /நியூஸ் /இந்தியா /

விடுதியில் கள்ளக்காதல் ஜோடி தகராறு - ஒன்றரை வயது குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற கொடூரம்

விடுதியில் கள்ளக்காதல் ஜோடி தகராறு - ஒன்றரை வயது குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற கொடூரம்

கொச்சி சம்பவம்

கொச்சி சம்பவம்

கொச்சியில் ஒன்றரை வயது பெண் குழந்தையை  ஒரு வாளிதண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கேரளாவில் ஒன்றரை வயது பெண் குழந்தையை விடுதி அறையில் உள்ள பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து நாடகமாடிய கள்ளக்காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். 

  கேரள மாநிலம் அங்கமாலி பரக்கடவு பகுதியை சேர்ந்தவர்  சஜூஸ். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தைதான் கொச்சியில் உள்ள தனியார் விடுதி அறையில் ஒரு வாளி தண்ணீருக்குள் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.  கடந்த இரு தினங்களுக்கு முன்பு சஜூஸ்-ன் அம்மா சிக்ஸியும் அவரது கள்ளக்காதலன் பினோயும் தம்பதியர்  எனக்கூறி  மகனின் குழந்தைகளுடன் கொச்சியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் தங்கும் விடுதியில் உள்ள அறையில் வைத்து சிக்ஸிக்கும் , பினோய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  Also Read: முகம் பார்க்காமல் மலர்ந்த காதல்.. இதயநோயால் காதலி இறந்ததால் காதலன் தற்கொலை

  இதைத்தொடர்ந்து சிக்ஸி அறையைவிட்டு வெளியே வந்துள்ளார். அந்த நேரம் அறையிலிருந்த பினோய் சிக்ஸியின் மேல் இருந்த கோபத்தை ஒன்றரை வயதான பிஞ்சு குழந்தையிடம் காட்டியுள்ளார். கழிவறையில் இருந்த வாளி தண்ணீரில் குழந்தையை மூழ்கடித்து கொன்றுள்ளார். இதனிடையே வெளியே சென்றிருந்த சிக்ஸி அறைக்கு வந்து  பார்த்தபோது குழந்தை மயக்க நிலையில் இருந்துள்ளது. உடனடியாக சிக்ஸி குழந்தையை எடுத்துக்கொண்டு சும்மா 2 மணி அளவில் குழந்தைக்கு வாந்தி மூச்சு திணறல் ஏற்பட்டதாக விடுதி ஊழியர்களிடம் கூறிவிட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.

  Also Read: தாயின் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. போக்சோ சட்டத்தில் இருவர் கைது

  அங்கு பரிசோதனை செய்து போது குழந்தை இறந்த தகவலை தெரிவித்து உள்ளனர். இவர்களது செய்கையில் சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நேற்று காலையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் இவர்கள் கணவன்,  மனைவி இல்லை என்பது தெரியவந்தது. மேலும் குழந்தைக்கு நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில் குழந்தை நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டதாக அறிவிக்கை வந்தபின்பு போலீசார் பினோயிடம் விசாரணை நடத்தினர்.

  தொடர் விசாரணையில் பினோய் குழந்தையை ஒரு வாளித் தண்ணீரில் மூழ்கடித்தது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இந்த வழக்கில் சஜூஸ் என்பவரது அம்மா சிக்ஸி அவருடைய கள்ளக்காதலன் ஜான் பினோய் இருவரையும் கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.

  செய்தியாளர்: சஜயகுமார் (கன்னியாகுமரி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Death, Illegal affair, Illegal relationship, Murder