கேரளாவில் நிரம்பியது இடுக்கி அணை: வெள்ள அபாய எச்சரிக்கை

கேரளாவில் நிரம்பியது இடுக்கி அணை: வெள்ள அபாய எச்சரிக்கை
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: August 13, 2018, 4:27 PM IST
  • Share this:
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு முழுக் கொள்ளளவை எட்டுவதால், கரையோரமுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை, குறவன் மலை மற்றும் குறத்தி மலை ஆகிய இரு அணைகளையும் இணைத்து கட்டப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய வளைவு அணை ஆகும். இந்த அணை 1973ம் ஆண்டு திறக்கப்பட்ட பிறகு, இதுவரை 1981 மற்றும் 1992 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டுமே நிரம்பியுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக 26 ஆண்டுகளுக்குப் பிறகு, இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டுகிறது. நள்ளிரவு வரை, அணையில் 2395 அடி வரை நீர் நிரம்பியுள்ளதாகவும், பகல் நேரத்தில் மட்டுமே அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்பதால் யாரும் அச்சமடைய தேவையில்லை என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


இடுக்கி அணை பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே அணை நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஆரஞ்சு எச்சரிக்கை எனப்படும் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்பு படையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ள நிலையில், ராணுவ உதவியும் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அணையை திறக்கும் போது செருதோனி ஆற்றில் வெள்ளம் பாயும் என்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். செயற்கைக்கோள் மூலம் கட்டடங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இடுக்கி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
First published: July 31, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading