ஹோம் /நியூஸ் /இந்தியா /

கணவன் தான் அடுத்த டார்க்கெட்.. மந்திரவாதியுடன் சேர்ந்துவாழ திட்டம் போட்ட லைலா? - நரபலி விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்

கணவன் தான் அடுத்த டார்க்கெட்.. மந்திரவாதியுடன் சேர்ந்துவாழ திட்டம் போட்ட லைலா? - நரபலி விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்

கேரளா நரபலி

கேரளா நரபலி

ஃபேஸ்புக்கில் ஸ்ரீதேவி என்ற போலி ஐடியில் உலா வந்துள்ளான் இந்த ஷபி. இந்த பேக் ஐடி-யில் இருந்து விரித்த வலையில் தான் பகவல் சிங் சிக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India

நரபலி கேரளாவை உலுக்கிக்கொண்டிருக்கிறது இந்த வார்த்தை. செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற பேராசையில் இரண்டு பெண்களின் உயிர்களை காவு வாங்கி இருக்கிறார்கள் கேரள தம்பதி. லாட்டரி விற்று பிழைப்பு நடத்தி வந்த இரண்டு பெண்களிடம் பாலியல் தொழிலில் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என நம்பி வைத்துள்ளான் போலி மந்திரவாதியான முகமது ஷபி.

இதே முகமது ஷபி தான் அந்த கேரள தம்பதியான பகவல் சிங் - லைலாவையும் நரபலி கொடுத்தால் செல்வம் கொழிக்கும் என நம்ப வைத்துள்ளான்.

இந்த வழக்கை எர்ணாக்குளம் காவல்துறைக்கு பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாணப்படம் எடுப்பதாக கூறித்தான் இரண்டு பெண்களையும் அழைத்து சென்றுள்ளான் ஷபி. கட்டிலில் நிர்வாணமாக கட்டி வைத்து அடித்தும் கழுத்தறுத்தும் கொலை செய்துள்ளனர். பெண்களின் அந்தரங்க உறுப்புகளை கத்தியால் கீறி அதில் இருந்து வந்த ரத்தத்தை வீடு முழுவதும் தெளித்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த பெண்களின் மார்பகங்களையும் ஷபி கத்தியால் வெட்டி எடுத்துள்ளான்.

போலீஸாரின் விசாரணையில் நரபலி கொடுத்த பெண்களின் சடலத்தி 60-க்கும் மேற்பட்டு துண்டுகளாக வெட்டி அந்த மாமிசத்தை சாப்பிட்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது. இந்நிலையில்தான் ஷபி-க்கும் லைலாவுக்கு இடையே நெருக்கமான உறவு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஷபியின் அடுத்த குறி லைலாவின் கணவரான பகவல் சிங் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பகவல் சிங்கை தீர்த்து கட்டி தகுந்த நேரம் எதிர்பார்த்து காத்திருந்த போது தான் இந்த நரபலி விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.

Also Read: சத்யாவை 2முறை கொல்ல முயன்றேன் காதலன் பகீர் வாக்குமூலம் - மகள் படுகொலையால் துக்கத்தில் தந்தை மரணம்..

இந்த ஷபி குறித்தும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஷபி தன்னுடைய 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். வயிற்றுப்பசியை போக்க எல்லா வேலையும் செய்து வந்துள்ளார். இந்த நபர் மீது 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

2020-ல் மூதாட்டியை கடுமையாக தாக்கிய வழக்கில் கைதாகி சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஃபேஸ்புக்கில் ஸ்ரீதேவி என்ற போலி ஐடியில் உலா வந்துள்ளான் இந்த ஷபி. இந்த பேக் ஐடி-யில் இருந்து விரித்த வலையில் தான் பகவல் சிங் சிக்கியுள்ளார். 2018-ல் பகவல் சிங் மற்றும் ஷபி-யின் உறவு ஆரம்பித்துள்ளது. இந்த விவகாரம் போலீசுக்கு மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. ஷபி -யின் வலையில் சிக்கி வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகலாம்.

First published:

Tags: Crime News, Kerala, Murder, Tamil News