ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேரள நரபலி வழக்கு விசாரணை.. காவல்துறையின் தாமதத்தால் ஒரு உயிர் பறிபோனதா?

கேரள நரபலி வழக்கு விசாரணை.. காவல்துறையின் தாமதத்தால் ஒரு உயிர் பறிபோனதா?

கேரளா காவல்துறை விசாரணை

கேரளா காவல்துறை விசாரணை

கேரளா இரட்டை நரபலி கொலை சம்பவத்தில் முதல் பெண் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட ஒரு மாதத்திற்கு பின்னரே இரண்டாவது பெண்ணை குற்றவாளிகள் கொலை செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kerala, India

  கேரளா மாநிலத்தில் இரு பெண்கள் நரபலி தரப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லின், பத்மா ஆகிய இரு பெண்களும் லாட்டரி விற்று தொழில் செய்து வந்தனர். கடந்த ஜுன் மாதத்தில் இருந்து ரோஸ்லினும், செப்டம்பர் மாதத்தில் இருந்து பத்மாவையும் காணவில்லை என்று அவர்களின் உறவினர்கள் காவல் நிலையங்களில் தனித்தனியாக புகார் அளித்தனர்.

  புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு பெண்களின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது,அவர்களின் செல்போன் எண்ணிற்கு கடைசியாக போலி மந்திரவாதியான முகமது ஷபி என்பவர் பேசியிருப்பதும் தெரியவந்தது.

  உடனே முகமது ஷபியை போலீசார் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களையும் நரபலி கொடுத்த அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட 2 பெண்களில் பத்மா என்ற பெண் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.இந்த நரபலி கொலையானது திருவல்லா அருகே இலந்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆயுர்வேத வைத்தியர் பகவல்சிங் - லைலா தம்பதி ஆகியோருக்காக நடந்துள்ளது.இதில் முதல் கொலை ஜூன் 8ஆம் தேதியும், இரண்டாவது கொலை செப்டம்பர் 26ஆம் தேதியும் நடைபெற்றுள்ளது. முதலில் உயிரிழந்த 50 வயது பெண் எர்ணாகுளத்தின் காலாடி பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகள் தாயை காணவில்லை என ஆகஸ்ட் 27ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

  அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து தான் இரண்டாவது கொலையும் அதன் தொடர்பான புகாரும் கேரளா காவல்துறைக்கு கிடைத்துள்ளது. இரண்டாவது புகார் கிடைத்த 24 மணிநேரத்திலேயே ஏசிபி ஜெயகுமார் தலைமையிலான காவல்படை குற்றத்தை கண்டுபிடித்துள்ளது.

  இதையும் படிங்க: மொபைல் போனுக்கு வந்த நிர்வாண வீடியோ கால்: ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியை மிரட்டி ரூ.17.8 லட்சம் பறித்த மர்மப் பெண்!

  ஒரு வேளை எர்ணாகுளம் காவல்துறை முதல் கொலையை விரைந்து விசாரித்து பலியான பெண் மற்றும் மந்திரவாதி ஷபிக்குமான தொடர்பை கண்டுபிடித்திருந்தால் அடுத்த ஒரு மாதத்தில் இன்னொரு கொலை நடக்காமல் தடுத்திருக்கலாம்  எனக்  கூறப்படுகிறது. அதேவேளை, எர்ணாகுளம் டிசிபி இது குறித்து கூறுகையில், "இந்த வழக்கில் உயிரிழந்த பெண் மற்றும் ஷபிக்குமான தொடர்பை காவல்துறையால் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் வழக்கை விசாரித்து தான் வந்தோம். ஆனால், அந்த பெண்ணின் செல்போனை டிராக் செய்து இடத்தை கண்டுபிடிப்பதில் காவல்துறை கடும் சிரமத்தை சந்தித்தது" என்றார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Double murder, Human Sacrifice, Kerala, Police investigation