கேரளாவில் CAA-க்கு எதிரான 620 கி.மீ நீள மனிதச் சங்கிலி போராட்டம்...!

கேரளாவில் CAA-க்கு எதிரான 620 கி.மீ நீள மனிதச் சங்கிலி போராட்டம்...!
மனிதச் சங்கிலி போராட்டம்
  • News18
  • Last Updated: January 27, 2020, 9:27 AM IST
  • Share this:
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் 620 கிலோ மீட்டர் நீளத்தில் மனித சங்கிலி போராட்டம் நடந்துள்ளது.

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முதலமைச்சர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆளும் இடதுசாரி கூட்டணி சார்பில் பிரமாண்ட மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

கேரளாவின் வடக்கு எல்லையில் உள்ள காசர்கோட்டில் இருந்து தெற்கு எல்லையில் உள்ள களியக்காவிளை வரை 620 கிலோமீட்டர் தொலைவிற்கு பொதுமக்கள் மனிதச்சங்கிலியாக அணிவகுத்து நின்றனர்.


முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் சுமார் 70 லட்சம் பொதுமக்கள் கலந்துகொண்டதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது.சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் புதிய வரலாறை கேரளா எழுதியிருப்பதாக அம்மாநில நிதி அமைச்சர் ஐசக் தாமஸ் கூறியுள்ளார்.
First published: January 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்