கொரோனா நோயாளிக்கு மருத்துவமனையிலேயே திருமணம்: கவச உடையில் வந்த மணமகள்!

கொரோனா வார்டிலேயே திருமணம்!

திருமணத்திற்காக ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டது.

  • Share this:
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மணமகனுக்கு நிச்சயிக்கப்பட்ட தேதியில் கொரோனா வார்டிலேயே திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்காக கவச உடையில் மணமகள் வந்திருந்தது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் சரத், வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த சரத்திற்கு அதே மாவட்டத்தைச் சேர்ந்த கைனகரி எனும் பகுதியைச் சேர்ந்த அபிராமி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஏப்ரல் 25ம் தேதி திருமணம் நடைபெறுவதாக முடிவானது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை மும்முரமாக மேற்கொண்டுவந்த நிலையில் மணமகன் சரத் மற்றும் அவருடைய தாயார் ஜிஜிமோல் இருவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இருவரும் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மணமகன் மற்றும் தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் மணமகள் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர், நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணம் நடைபெறுமா என சந்தேகமும் ஏற்பட்டது,

இருப்பினும் நிச்சயிக்கப்பட்ட அன்றே திருமணத்தை நடத்த வேண்டும் என இரு குடும்பத்தினரும் உறுதியாக இருந்த நிலையில் மணமகன் சரத் சிகிச்சை பெற்றும் வரும் கொரோனா வார்டிலேயே திருமணத்தை நடத்திவிடலாம் என முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டது. கொரோனா கவச உடையில் மணமகளை ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் சரத் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வார்டிற்கு கூட்டிச் சென்று அங்கேயே மாலை மாற்றி திருமணம் செய்து வைத்துள்ளனர். மணமகளின் தாயார் மாலையை எடுத்து தந்திருக்கிறார்.
கொரோனாவால் குடும்ப உறுப்பினரை இழந்த சில மணி நேரத்திலேயே பணிக்கு திரும்பிய காவல்துறை அதிகாரி!

இந்த வித்தியாசமான திருமணத்தை அங்கிருந்தவர்கள் வித்தியாசமாக பார்த்து வாழ்த்திவிட்டு சென்றனர். கொரோனா பரவல் ஏற்பட்ட பின்னர் பலருக்கும் அது மாற்றத்தை தந்துள்ளது. பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. இருப்பினும் நாம் அதற்கு பழகிக் கொண்டுள்ளோம் என்பதையே இது போன்ற சம்பவங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன..
Published by:Arun
First published: