6 வயது சிறுமியை 3 வருடமாக பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI ன் நிர்வாகியான 22 வயதாகும் அர்ஜூன் என்பவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரித்த போது சிறுமியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

  • Share this:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI நிர்வாகி ஒருவரால் 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் 6 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக அச்சிறுமியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்து அதை தற்கொலை போன்று சித்தரித்ததும், கடந்த 3 ஆண்டுகளாக அவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேயிலை எஸ்டேட்கள் அதிகம் உள்ள கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், வண்டி பெரியாறு பகுதியில் உள்ள எஸ்டேட் ஒன்றில் வசித்து வந்த கூலித் தொழிலாளி ஒருவரின் 6 வயது மகள், அவரது வீட்டில் ஷாலை பயன்படுத்தி தூக்கி மாட்டிக்கொண்டு தற்கொலை செய்தது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில் சில முக்கியமான தகவல்கள் தெரியவந்ததது.

Also Read:   ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு விமானப்போக்குவரத்துத்துறை: தந்தை வகித்த பதவி தற்போது மகனுக்கு!

சிறுமி கொல்லப்பட்ட அன்றும் அதற்கு முன்னரும் நீண்ட காலமாக அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் அக்கம்பக்கத்து வீட்டாரிடம் விசாரித்த நிலையில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI ன் உள்ளூர் பிரமுகரான 22 வயதாகும் அர்ஜூன் என்பவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரித்த போது சிறுமியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களையும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Also Read:     தமிழக பா.ஜ.க புதிய தலைவராகிறாரா அண்ணாமலை?

6 வயதான சிறுமியின் பெற்றோர் அர்ஜூனுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்கள். அருகாமையில் அர்ஜூன் வசித்து வருவதால் அவரின் வீட்டுக்கு சிறுமி எப்போதும் சென்று வருவார். அப்போது இனிப்புகள் வழங்குவதாக கூறி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து வந்திருக்கிறார் அர்ஜூன். இதே செயலில் கடந்த 3 ஆண்டுகளாக அவர் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஜூன் 30ம் தேதி பாலியல் வன்புணர்வு செய்த போது சிறுமி மயக்கமடைந்திருக்கிறார். இதனால் எங்கே தான் மாட்டிக்கொள்வோம் என நினைத்து சிறுமியை ஷாலை பயன்படுத்தி அவரின் வீட்டிலேயே தூக்கில் தொங்க விட்டிருக்கிறார். பின்னர் எதுவும் தெரியாதது போல சிறுமியின் இறுதி சடங்கில் அழுது நடித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ததாக அர்ஜூனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரளாவில் ஆளும் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்து வரும் நிலையில் அக்கட்சி இளைஞர் அமைப்பின் பிரமுகர் மீதான இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Published by:Arun
First published: