கேரளாவில் ஒரு மாணவிக்காக 70 பேர் பயணிக்கக் கூடிய படகு இயக்கம்

கேரளாவில் ஒரு மாணவிக்காக 70 பேர் பயணிக்கக் கூடிய படகு இயக்கம்
+1 தேர்வு எழுதச் சென்ற மாணவி
  • Share this:
கேரளாவில் 11ஆம் வகுப்பு மாணவி பொதுத்தேர்வு எழுதச் சென்ற ஒரே ஒரு மாணவிக்காக, 70 பேர் பயணிக்கும் படகு இயக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, கேரளாவில் இரண்டு பாடங்களுக்கான பிளஸ் ஒன் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் விடுபட்ட தேர்வுகள் நடைபெற்ற நிலையில், ஆலப்புழா மாவட்டம் குட்டநாட்டைச் சேர்ந்த சந்திரா என்ற மாணவி, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்துக்குச் செல்ல உதவியாக படகு இயக்குமாறு நீர்வழிப் போக்குவரத்துத் துறைக்கு கடிதம் அனுப்பினார்.


அவரது கோரிக்கையை ஏற்று, 70 பேர் பயணிக்கக் கூடிய படகு இயக்கப்பட்டதோடு, தேர்வு எழுதி முடிந்தபிறகு மாணவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தது.

ஒரே ஒருவருக்காக படகு இயக்கப்பட்டபோதும், அவரிடம் இருந்து டிக்கெட் விலையாக 18 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டதாக, கேரள அரசு தெரிவித்துள்ளது.

Also read... நடப்பாண்டு ஆன்லைன் மூலம் பொறியியல் கலந்தாய்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு


Also see...
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading