Home /News /national /

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை

சபரிமலை

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நாள்தோறும் 45 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த 15ம் தேதி திறக்கப்பட்டது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நாள்தோறும் 45 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று 27,840 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும் சனிக்கிழமை அன்று 42,354 பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்து தரிசனத்திற்கு காத்திருப்பதாகவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சானிடைசர், முகக்கவசம் வழங்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Ayyappa Temple, Ayyappan temple in Sabarimala, Kerala, Sabarimala devotees

    அடுத்த செய்தி