Home /News /national /

கேரளாவில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக உயர்வு.. இன்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு

கேரளாவில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக உயர்வு.. இன்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு

கேரளா மழை

கேரளா மழை

kerala rain: கேரளாவில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

    கேரளாவில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. 10 மாவட்டங்களில் இன்று அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதலில் லேசான அளவு மழை பெய்துவந்த நிலையில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

    மழை தொடர்பான சம்பவங்களில் நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்தார். இதனால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 49 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 757 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி,எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர் , வயநாடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கேரளா, மகாத்மா காந்தி, காலடி உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் இன்று நடைபெற இருந்த தேர்வை தள்ளி வைத்து உள்ளன. அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுரைகளை பின்பற்றுமாறும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Heavy rain, Kerala rains

    அடுத்த செய்தி