கொரோனா கண்டறியும் ரேபிட் பரிசோதனையில் நல்ல முடிவு... கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்!

கொரோனா கண்டறியும் ரேபிட் பரிசோதனையில் நல்ல முடிவு... கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்!
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா. (கோப்புப் படம்)
  • Share this:
கொரோனா கண்டறியும் ரேபிட் பரிசோதனையில் நல்ல முடிவுகள் வந்துக் கொண்டிருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்த வந்தவர்கள் மூலம் சமூக பரவல் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால், பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிந்து கொள்ள ரேபிட் பரிசோதனை நடத்த கேரளாவுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்தது.

இந்நிலையில், ரேபிட் பரிசோதனையில் நடத்தப்படும் தனிமைப்படுத்துதல், சோதனை மற்றும் சிகிச்சை ஆகியவை மூலம் நல்ல முடிவுகள் வருவதாகவும், இதன் மூலம் ஒருவருக்கு பரிசோதனை நடத்தினால் 10 முதல் 30 நிமிடங்களுக்குள் முடிவு தெரிந்துவிடும் என்றும் கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். 9 ஆய்வகங்களில் 8000க்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதித்து இருப்பதாகவும் ஷைலஜா கூறியுள்ளார்.


Also see...
First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading