ஹோம் /நியூஸ் /இந்தியா /

வெறிபிடித்த மற்றும் ரேபிஸ் நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேரளா மனு!..

வெறிபிடித்த மற்றும் ரேபிஸ் நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேரளா மனு!..

மாதிரி படம்

மாதிரி படம்

கேரளாவில் கடந்த 9 மாதத்தில் மட்டும் நாய்களின் தாக்குதலுக்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  வெறிபிடித்த மற்றும் ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளான நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

  கேரளாவில் கடந்த சில நாட்களாக வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் தெருவில் நடந்துசெல்லும் சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் தெரு நாய் கடி மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  பால் பாக்கெட் வாங்க கடைக்கு சென்றபோது 12 வயது சிறுமி ஒருவர் தெரு நாய்கள் கடித்ததில்  உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலும் கேரளாவின் கன்னூர் பகுதியில் இளைஞர்கள் இருவரை தெரு நாய்கள் கூட்டமாக துரத்தும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Also Read: என் பவர் தெரியாம விளையாடுறீங்க... யாரை பார்த்தும் பயமில்லை... TTF வாசன் வீடியோ மூலம் எச்சரிக்கை

  இந்த நிலையில் கடந்த 9 மாதத்தில் மட்டும் நாய்களின் தாக்குதலுக்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து வெறி நாய்களை பிடித்து கொல்ல வேண்டும் என்ற கோரிக்கை அந்த மாநிலங்களில் வலுத்து வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனையடுத்து கேரளாவில் பல பஞ்சாயத்துகள் தெரு நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில் கேரள அரசு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெறிபிடித்த மற்றும் ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளான நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Kerala, Kills a street dog, Supreme court