கேரளாவில் படிப்பறிவு அதிகம் இருப்பதே பாஜக அங்கு வளராததற்கு காரணம் - பாஜக எம்.எல்.ஏ ஓ.ராஜகோபால்!

பாஜக எம்.எல்.ஏ ஓ.ராஜகோபாலன்

கேரளாவில் பாஜக வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு அங்கு படிப்பறிவு அதிகம் இருப்பதே காரணம் என்று பாஜக எம்.எல்.ஏ ஓ.ராஜகோபாலன் பேசியுள்ளார்.

  • Share this:
Assembly Election 2021சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் ஒன்றாக விளங்கும் கேரளாவில் இந்த முறை வலுவாக கால்பதித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தென் இந்தியாவில் கர்நாடகாவை தவிர்த்து பாஜகவுக்கு பெரிதாக பலம் இல்லை. அதே நேரத்தில் தென் இந்தியாவில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கூட்டணி பலத்துடன் சட்டமன்ற தேர்தலை பாஜக எதிர்கொள்கிறது. வலதுசாரிகள், காங்கிரஸ் மாறி மாறி ஆட்சி செய்து வரும் கேரளாவில் மாற்று சக்தியாக மாற வேண்டும் என்ற முடிவில் இருந்த பாஜகவுக்கு சபரிமலை விவகாரம் கைகொடுக்கும் என அக்கட்சி நினைத்தது. இருப்பினும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தாமல் காங்கிரஸுக்கு தான் அது கைகொடுத்தது.

இந்நிலையில் 140 தொகுதிகளை உள்ளடக்கிய கேரளாவில் ஒற்றை பாஜக எம்.எல்.ஏவான ஓ.ராஜகோபாலனிடம் கேரளாவில் பாஜக வளர்ச்சி பெறாததன் காரணம் என நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பாஜக வளர்ச்சி பெறாததன் காரணம் என்ன என எம்.எல்.ஏ ராஜகோபாலனிடம் கேட்ட போது, “கேரளா வித்தியாசமான மாநிலம். இங்கே இரண்டு மூன்று வெவ்வேறு காரணிகள் உள்ளன. கேரளா 90% படிப்பறிவு கொண்ட மாநிலம். கேரள மக்கள் சிந்தித்து செயலாற்றக்கூடியவர்கள். இது படித்தவர்களுக்கான குணநலன்கள். இதுவும் ஒரு பிரச்னை.

இரண்டாவதாக இங்கு 55% இந்துக்களும், 45% சிறுபான்மையினரும் உள்ளனர். எனவே இந்த வேறுபாடு எல்லா கணக்கீடுகளிலும் இருக்கும். எனவே தான் கேரளாவை பிற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாது. இங்கு இருக்கும் சூழல் வித்தியாசமானது. இருப்பினும் நாங்கள் (பாஜக) இங்கு மெதுவாக, நிலையான வளர்ச்சியை பெற்று வருகிறோம்” என்றார்.

கேரள நிலவரம் குறித்து பாஜகவின் ஒற்றை எம்.எல்.ஏவாக இருக்கும் ஓ.ராஜகோபாலன் தெரிவித்திருக்கும் இக்கருத்து அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Arun
First published: