டொவினோ தாமஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘மின்னல் முரளி’ திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட மணமகன் தனது திருமண போட்டோ ஷூட்டை சூப்பர் ஹூரோ உடையணிந்து நடத்தியது கவனத்தை ஈர்த்துள்ளது. அது தொடர்பான புகைப்படம், வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
திருமணத்துக்கு முன்பும், பின்பும் போட்டோ ஷூட் எடுக்கும் வழக்கம் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. சிலர் இதற்காக பெரும் அளவில் பணத்தை செலவிடமும் தயக்கம் காட்டுவதில்லை. வாழ்க்கையில் ஒரு முறை நடைபெறும் வைபவத்தை சிறப்புக்குரிய நினைவலைகளாக மாற்ற அவர்களுக்கு போட்டோ ஷூட் அவசியமாகிறது. திருமண ஜோடியினரை விதவிதமாக புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு புகைப்பட கலைஞர்களும் தங்களின் மூளையை கசக்கி புதுப்புது கான்செப்ட்களை புகுத்துகின்றனர்.
அந்த வகையில் ‘சூப்பர் ஹீரோ’ கான்செப்டால் ஈர்க்கப்பட்ட கேரள மணமகன் ஒருவர் தனது வெட்டிங் போட்டோ ஷூட்டை சமீபத்திய கேரள சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி பாணியில் நடத்தியிருக்கிறார்.
Also read: விளையாடச் சென்ற 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மைனர் சிறுவர்கள்!!
கோட்டயத்தைச் சேர்ந்த புகைப்பட ஆர்வலரான அமல் ரவீந்திரன் என்ற மணமகன், ஏற்கனவே தனது திருமணத்துக்கு முந்தைய வெட்டிங் ஷூட்டை சூப்பர் ஹூரோவான மின்னல் முரளி போல உடையணிந்து நடத்தியிருக்கிறார். அமல் ரவீந்திரன் சூப்பர் ஹீரோ போன்ற உடையில் வயல்வெளிகளில் மணமகளுடன் ஓடிச்சென்று இருவரும் மாலை மாற்றிக் கொள்வதாக வீடியோ எடுக்கப்பட்டது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் வரவேற்பையும் பெற்றது.

Credits - Athreya
இதனையடுத்து தற்போது திருமணத்துக்கு பிந்தைய போட்டோ ஷூட்டையும் மின்னல் முரளி உடையணிந்து மணமகளுடன் அவர் நடத்தியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், திருமணம் முடிந்த கையோடு, புகைப்படககலைஞர் எங்களை போட்டோ ஷூட்டுக்கு அழைத்துச் சென்றார். மணமகள் அஞ்சு தனது திருமணத்திற்கு ஒரு சூப்பர் ஹீரோ உணர்வு கிடைத்திருப்பதாக உற்சாகம் அடைந்துள்ளார்.
Also read: பஞ்சாப்பில் திணறும் விவசாயிகளின் புதிய கட்சி!!
முதல் படப்பிடிப்பின் போது நான் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து எங்களுக்கு கிடைத்த வரவேற்பு மிகப்பெரியது மற்றும் இரண்டாவது முறையாக, நான் அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் என மணமகள் அஞ்சு கூறினார்.
முன்னதாக கேரள சுகாதாரத்துறையினரும் மின்னல் முரளி கேரக்டரை பயன்படுத்தி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியது வரவேற்பை பெற்றுத்தந்தது. அதே போல போக்குவரத்துத் துறையினரும் சூப்பர் ஹூரோ கேரக்டரை பயன்படுத்தி அதிவேகத்தில் செல்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.