பா.ஜ.கவுக்கு என்னுடைய அரசு அடிபணியாது - பினராயி விஜயன் சூளுரை

சபரிமலையில் பெண்கள் தரிசனம் நடத்தியதற்கு எதிராக நடந்த போராட்டம் பல இடங்களில் கலவரமாக மாறியது.

பா.ஜ.கவுக்கு என்னுடைய அரசு அடிபணியாது - பினராயி விஜயன் சூளுரை
பினராயி விஜயன்
  • News18
  • Last Updated: January 8, 2019, 12:12 PM IST
  • Share this:
பா.ஜ.கவின் மிரட்டலுக்கு கேரளா அரசு பணிந்து போகாது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் சபரிமலையிலுள்ள ஐயப்பன் கோயிலுக்கு 50-க்குட்பட்ட பெண்கள் நுழைந்ததற்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடந்தது. போராட்டம் பல இடங்களில் கலவரமாக மாறியது.

இது தொடர்பாக பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், கலவரத்தில் ஈடுபடத்தில் 91 % பேர் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்திருந்தார்.


இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய பா.ஜ.க எம்.பி நிஷிகந்த் துபே, “கேரளாவில் நிகழும் வன்முறையின் காரணமாக அம்மாநிலத்தில் ஜனாபதி ஆட்சி கொண்டுவரப் படவேண்டும். கேரள கம்யூனிஸ்ட் ஆட்சி, மரண அரசியல் செய்துக்கொண்டுள்ளது. அதற்கு பா.ஜ.க தொண்டர்கள் பலியாகின்றனர்” என்று தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான பேரணி


பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பினராயி விஜயன், “ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க கேரளாவின் சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்கின்றன. அவர்கள், அவர்களால் முடிந்த சிறப்பானதைச் செய்கின்றனர்.கடந்த சில நாள்களாக, அவர்கள் வேண்டுமென்ற வன்முறையைத் தூண்டிவிடுவதைப் பார்க்கிறோம். அவர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோரையும் தாக்குகின்றனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்வது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். வன்முறையாளர்களைக் கைது செய்யக் கூடாது என்று அவர்கள் கூறுகின்றனரா? பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படாமல் இருக்கலாம். ஆனால், கேரளாவில் அது நடக்காது. சபரிமலைக்கு பக்தர்கள் தொடர்ச்சியாக வருகை தருகின்றனர்.

சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதற்கு அதுவே சாட்சி” என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி பேசியது குறித்து தெரிவித்த பினராயி விஜயன், “பா.ஜ.கவின் மிரட்டலுக்கு என்னுடைய அரசு அடிபணியாது” என்று தெரிவித்தார்.

Also see:

First published: January 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading