திருநங்கைகளுக்கும், வீடற்று வீதிகளில் வசிப்போருக்கும் ரேஷன் கார்டு: கேரள அரசு

திருநங்கைகளுக்கும், வீடற்று வீதிகளில் வசிப்போருக்கும் ரேஷன் கார்டு: கேரள அரசு

திருநங்கைகளுக்கும், வாடகை வீட்டில் வசிப்போருக்கும் ரேஷன் கார்டு வழங்க கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 • Share this:
  வாடகை வீட்டில் வசிப்போர் சுய பிரமாணப் பத்திரங்களை சமர்ப்பித்தால் கேரள அரசு ரேஷன் கார்டுகள் வழங்கும் என அம்மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் ஜி.ஆர்.அனில் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, வீதிகளில் தஞ்சமடைந்துள்ள வீடற்றவர்களுக்கும், திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டுகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

  Also read: வரதட்சனை கொடுமையால் இளம்பெண் விஸ்மயா தற்கொலை எதிரொலி: கணவர் அரசு பணியிலிருந்து நீக்கம்..

  வீதிகளில் வாழும் மக்களுக்கு கூட ரேஷன் கார்டுகளை வழங்குவதே அரசின் நோக்கம். திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டுகளும், ஓணம் சிறப்பு தொகுப்பும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும், ஓணம் திருவிழாவை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: