ஹோம் /நியூஸ் /இந்தியா /

வாழ்க்கைமுறை நோய்களை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சையளிக்க கேரள அரசு சூப்பர் திட்டம்!

வாழ்க்கைமுறை நோய்களை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சையளிக்க கேரள அரசு சூப்பர் திட்டம்!

Veena george

Veena george

கேரள அரசு வாழ்கை முறை நோய்களினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சூப்பர் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்போது வாழ்க்கை முறைகள் பெருமளவு மாறிவிட்டன. உணவு பழக்கவழக்கங்களில் மாற்றம், குறைந்துவிட்ட உடல் உழைப்பு போன்ற காரணங்களால் இன்று நகரங்கள் மட்டுமல்லாது கிராமத்தினருக்கும் கூட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. மனிதர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இளம் வயதினருக்கு கூட இதய நோய்கள், கேன்சர் என பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற காரணங்களால் ஏற்படும் நோய்களை வாழ்க்கை முறை நோய்கள் என மருத்துவத்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

கேரள அரசு வாழ்கை முறை நோய்களினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சூப்பர் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சரான வீனா ஜார்ஜ், கொச்சியில் உள்ள இந்திரா காந்தி கூட்டுறவு மருத்துவமனையின் புதுப்பிக்கப்பட்ட கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது, “வாழ்க்கை முறை நோய்களால் பாதிக்கப்படுவோரை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஏதுவாக கேரள அரசு, 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் குறித்த தரவுத்தளம் (database) ஒன்றை உருவாக்கி வருகிறது.

Also read:  கடந்த ஆண்டு வணிகர்கள் அதிகளவில் தற்கொலை – NCRB அதிர்ச்சி ரிப்போர்ட்

இதன் மூலம் நோய்கள் முற்றிய நிலைக்கு சென்றுவிடாமல் தடுத்து ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

கேரளாவில் என்னென்ன வகையான புற்றுநோய்கள் உள்ளன, எதனால் அதிக பாதிப்பு, இவற்றை தடுக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன, என்பது குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி வருகிறோம்.

மேலும், எர்னாகுளம் மாவட்டத்தை உலகளவிலான மருத்துவ சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவ வசதிகள் என இரண்டையும் ஒருங்கிணைத்து எர்னாகுளம் மருத்துவ சுற்றுலா தலமாக உருவாக்கப்படும். இங்கு சிறந்த மருத்துவ கட்டமைப்பு இருக்கிறது. இதற்காக மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.” இவ்வாறு சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.

Published by:Arun
First published:

Tags: Kerala, Lifestyle change