சபரிமலையில் பெண்களுக்கு தனியாக நாட்களை ஒதுக்க கேரள அரசு திட்டம்

Sabarimala | சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல - மகர பூஜைக்காக நாளை நடைதிறக்கப்பட உள்ளது.

சபரிமலையில் பெண்களுக்கு தனியாக நாட்களை ஒதுக்க கேரள அரசு திட்டம்
சபரிமலை
  • News18
  • Last Updated: November 15, 2018, 6:04 PM IST
  • Share this:
சபரிமலை பிரச்னை தொடர்பாக இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கேரள அரசு உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக கேரள அரசியல் கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடந்தது.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், தீர்ப்பை அமல்படுத்துவதற்கு கால அவகாசம் கேட்டு மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக கோரிக்கை விடுத்தன. ஆனால், தீர்ப்பை அமல்படுத்துவதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாக பினராயி கூறியுள்ளார். இதனை அடுத்து, காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன.


கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், “பக்தர்களின் உணர்வுகளையும் மாநில அரசு மதிக்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பக்தர்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசின் கடமை” என்று கூறினார். மண்டல - மகர விளக்கு பூஜையின் போது பெண்களுக்கு மட்டும் தனியாக நாட்களை ஒதுக்கி தரிசனம் செய்ய வகை செய்யும் யோசனை இருப்பதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

Also See..

First published: November 15, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading