• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தீவிரமடையும் சபரிமலை போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு தேவசம் போர்டு அழைப்பு

தீவிரமடையும் சபரிமலை போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு தேவசம் போர்டு அழைப்பு

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணி (கோப்புப்படம்)

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணி (கோப்புப்படம்)

சபரிமலை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பந்தளம் அரண்மனை குடும்பம், ஐயப்ப சேவா சங்கம் ஆகியவற்றுக்கு தேவசம் போர்டு அழைப்பு விடுத்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதனால், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும் அதே சமயத்தில் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியது. தீர்ப்பை எதித்து மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என கேரள அரசும், கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டும் கூறின.

    தீர்ப்புக்கு எதிராக கேரளா மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இன்னும், 2 நாட்களில் மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட உள்ளது. அப்போது, பெண்கள் கோவிலுக்கு வந்தால் அனுமதிக்கப்படலாம் என்பதால், போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருகிறது.

    சபரிமலை - கோப்புப் படம்


    திருவனந்தபுரத்தில் இன்று பாஜக சார்பில் பிரம்மாண்ட பேரணி நடந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு, அதற்கான பணியில் இறங்கியுள்ளது.

    சபரிமலை விவகாரம் தொடர்பாக நாளை காலை பேச பந்தளம் அரச குடும்பம், ஐயப்ப சேவே சங்கம் ஆகியவற்றுக்கு தேவசம் போர்டு அழைப்பு விடுத்துள்ளது. எனினும், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு செல்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே விவகாரம் தொடர்பாக பேச அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்த போது கூட அவர்கள் செல்ல மறுத்தனர்.

    சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற முடிவு எடுத்து விட்ட கேரள அரசு அதன் பின்னர் பேச்சுவார்த்தை என நாடகமாடுகிறது என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: