என்னிடம் ஆலோசித்திருக்க வேண்டும்! பினராயி விஜயனைச் சீண்டும் கேரளா ஆளுநர்

உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக என்னிடம் உரிய அனுமதி பெறுவது என்பதுதான் சரியான செய்முறை.

என்னிடம் ஆலோசித்திருக்க வேண்டும்! பினராயி விஜயனைச் சீண்டும் கேரளா ஆளுநர்
ஆரிப் முகமது கான்
  • Share this:
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு முன்பாக என்னிடம் ஆலோசனை செய்திருக்க வேண்டும் என்று கேரளா மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் விமர்சனம் செய்துள்ளார்.

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய கேரளா மாநிலம் ஆளுநர் ஆரிப் முகமது கான், ‘அவர்கள் செய்தது நான் தவறு என்று கூறவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக என்னிடம் உரிய அனுமதி பெறுவது என்பதுதான் சரியான செய்முறை.


மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவரான நான், செய்தித் தாள்களின் மூலமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது என்று தெரிந்துகொண்டேன். ஆளுநரின் அனுமதியில்லாமல் மாநில அரசு இதனை செய்ய முடியுமா என்பது குறித்து நான் ஆய்வு செய்யவுள்ளேன்’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்