ஹோம் /நியூஸ் /இந்தியா /

அரசு தயாரித்த உரை.. வரி மாறாமல் அப்படியே வாசித்த கேரள ஆளுநர்..!

அரசு தயாரித்த உரை.. வரி மாறாமல் அப்படியே வாசித்த கேரள ஆளுநர்..!

கேரள ஆளுநர் உரை

கேரள ஆளுநர் உரை

கேரள சட்டமன்றத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அரசு தயாரித்துக்கொடுத்த உரையை வரி மாறாமல் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் படித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

அண்மையில் தமிழ்நாடு அரசு தயாரித்துக்கொடுத்த உரையின் சில பத்திகளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தும், மாற்றியும் படித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.அதற்கு அன்றைய தினமே எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாசித்துக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவரிடம் தமிழ்நாடு அரசு புகார் மனு அளித்திருந்தது.

இதேபோல் கேரளாவிலும் மாநில அரசுக்கும் ஆளுநர் ஆரிஃப் முகமுது கானுக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த சூழலில் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில், அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையை அப்படியே படித்தார். அதில் மாநில அரசின் கடன் வரம்பை கட்டுப்படுத்தும் மத்திய அரசுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. வலுவான தேசம் உருவாக வேண்டுமானால் மாநிலங்கள் அதிகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும் என்றும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

First published:

Tags: Assembly, Governor, Kerala government