ஹோம் /நியூஸ் /இந்தியா /

லாட்டரியில் கோடிகளை வென்றவர்களுக்கு பணத்தை கையாள பயிற்சி.. கேரளா அரசு திட்டம்

லாட்டரியில் கோடிகளை வென்றவர்களுக்கு பணத்தை கையாள பயிற்சி.. கேரளா அரசு திட்டம்

கேரளா அரசு லாட்டரி விற்பனை

கேரளா அரசு லாட்டரி விற்பனை

கேரளாவில் லாட்டரி மூலம் பெரும்தொகை வென்ற நபர்களுக்கு நிதி பயிற்சி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kerala, India

  சமீப காலமாக கேரளா லாட்டரி நாடு முழுவதும் பரபரப்பாக பேசி கவனம் பெற்று வருகிறது. அம்மாநிலத்தில் அரசே லாட்டரி விற்று வரும் நிலையில், பல சாமானியர்கள் இந்த லாட்டரி மூலம் பயன் அடைந்து அவர்கள் வாழ்வே சிறந்த மாற்றத்தை கண்டுள்ளது.சமீபத்தில் அப்படி ஒரு அதிர்ஷ்டத்தை கண்ட நபர் கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ ட்ரைவர் அனூப்.

  ஓணம் பண்டிகையையொட்டி ரூ.25 கோடி பரிசு தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டு குலுக்கலில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அனுப் என்ற ஆட்டோ டிரைவருக்கு முதல் பரிசான ரூ.25 கோடி கிடைத்தது. ஒரே நாளில் கோடீஸ்வரரான அவரை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வாழ்த்துக்களை பகிர்ந்து வந்தனர். இதையடுத்து அவர் பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வங்கியில் டெபாசிட் செய்தார்.

  பணம் கிடைத்த பின்னர் அதனை கொண்டு வீடு கட்டுவேன், ஏழைகளுக்கு உதவுவேன் எனக் கூறினார். ஆனால் அவருக்கு எதிர்பாராத விதமாக தொல்லைகள் தொடங்கியது. இன்னும் அரசிடம் இருந்து பணமே கைக்கு வராத நிலையில், தினசரி பலரும் வீடு தேடி சென்று தாங்கள் துயரத்தில் இருப்பதாகவும், பணம் தந்து உதவுங்கள் எனவும் தொல்லை அளித்து வந்துள்ளனர். மேலும், சிலர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

  இதனால் நிம்மதி இல்லாமல் தவித்து போன அனூப் வீட்டை பூட்டி விட்டு சகோதரியின் வீட்டில் தலைமறைவானார்.திடீர் கோடீஸ்வரராகி வாழ்வில் பெரும் அதிர்ஷ்டம் கண்ட நபர், இப்படி நிம்மதியில்லாமல் தவிக்கிறாரே என்று அனைவரும் யோசிக்கும் நிலையை அனூப் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.இப்படி தான் பலரும் திடீரென்று பெரும் தொகை கிடைத்தால் அதை கையாளத் தெரியமால் கோட்டைவிடும் நிலைகள் உருவாகிறது.எனவே, இவர்களின் நலனுக்காக கேரளா அரசே முக்கிய முன்னெடுப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது. லாட்டரி மூலம் பெரும் தொகை கிடைத்த நபர்களுக்கு அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற பயிற்சியை நிதித்துறை சார்ந்த நிபுணர்கள் மூலம் வழங்கும் திட்டத்தை கேரளா அரசு அறிவித்துள்ளது.

  இதையும் படிங்க: உலக புகழ்பெற்ற ‘மைசூர் தசரா விழா’ - தொடக்க விழாவில் குடியரசுத்தலைவர் முர்மு பங்கேற்பு

  கேரளா நிதியமைச்சர் கேஎன் பாலகோபால் இந்தாண்டு பட்ஜெட்டிலேயே இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.இதை விரைந்து அமல்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கேராளவில் நாள்தோறும் 90 லட்சம் லாட்டரிகள் விற்பனையாவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதேபோல், மாநிலத்தின் வரியில்லா வருவாயில் 81.32% லாட்டரிக்கள் மூலம் கிடைப்பதாக மாநில திட்டக்குழு தெரிவித்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Kerala, Lottery