Home /News /national /

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில் ஊரடங்கு அறிவிப்பு

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில் ஊரடங்கு அறிவிப்பு

ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் மக்களிடம் தொற்று அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்தியா உட்பட 40 நாடுகளில் ஒமிக்ரான் பரவி வருகிறது. அதில் இந்தியாவில் ராஜஸ்தான் , மகாராஷ்டிரா , டெல்லி மற்றும் கர்நாடகா போன்ற நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. இன்னும் இது மற்ற மாநிலங்களிலும் பரவலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் உங்களை தற்காத்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் தவிர்க்க முடியாத பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் ஒமிக்ரானிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள இந்த 5 விஷயங்களை மறக்காமல் கடைப்பிடியுங்கள்.

ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் மக்களிடம் தொற்று அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்தியா உட்பட 40 நாடுகளில் ஒமிக்ரான் பரவி வருகிறது. அதில் இந்தியாவில் ராஜஸ்தான் , மகாராஷ்டிரா , டெல்லி மற்றும் கர்நாடகா போன்ற நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. இன்னும் இது மற்ற மாநிலங்களிலும் பரவலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் உங்களை தற்காத்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் தவிர்க்க முடியாத பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் ஒமிக்ரானிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள இந்த 5 விஷயங்களை மறக்காமல் கடைப்பிடியுங்கள்.

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து மக்களை மிரட்டி வருவதால் 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் ஒத்திப்போடப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்தது

    இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் இரவு ஊரடங்கு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 30-ம் தேதி வியாழக்கிழமையில் இருந்து இந்த ஊரடங்கு ஆரம்பமாகிறது.

    Also read:  ஏலியன்கள் பூமிக்கு வருவார்கள்.. 2022ல் இந்தியாவில் என்னென்ன நடக்கும் - பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள்

    இதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். ஜனவரி 2-ம் தேதி வரை இந்த தற்காலிக ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் ஊரடங்கு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டது.

    Also read:  டான்ஸ் பயில வந்த சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த மாஸ்டர்!

    அடுத்துவரும் சில நாட்களுக்கு அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்குள் அடைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் கூடுமானவரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளார்கள். கேரளாவில் உள்ள கடற்கரைகள், வணிக தளங்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும், தடுப்பு நடவடிக்கைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    ஒமைக்ரான் பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் வட மாநிலங்களான உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    தென் மாநிலங்களை பொறுத்தளவில் கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் அண்டை மாநிலமான கேரளாவிலும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ளது. தொடர்ச்சியாக பல மாநிலங்களில் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் விதமாக கட்டுப்பாடுகளை விதித்து கண்காணித்து வருகின்றன. தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

    இதற்கிடையே உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. அதேநேரத்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து மக்களை மிரட்டி வருவதால் சட்டமன்ற தேர்தல்கள் ஒத்திப்போடப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இந்நிலையில் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தள்ளிப்போன வாய்ப்புகள் ஏதும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் என்று உண்டு என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளார்கள்.

    Also read:  120 மணி நேர ரெய்டு.. ரூ.257 கோடி ரொக்கம் பறிமுதல்.. தொழிலதிபர் வீட்டில் பணப் புதையல்..
    Published by:Musthak
    First published:

    Tags: Kerala, Night Curfew, Omicron

    அடுத்த செய்தி