கேரள தங்கக் கடத்தல் விவகாரம்: முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது

கேரள தங்கக் கடத்தல் விவகாரம்: முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது
ஸ்வப்னா சுரேஷ்
  • Share this:
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ் பெங்களூரில் வைத்து தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டார்.

துபாயிலிருந்து, கேரளாவில் உள்ள ஐக்கிய அரசு அமீரக துணை தூதரக முகவரிக்கு ஜூன் 3-ம் தேதி சரக்கு விமானம் மூலம் ஒரு பார்சல் வந்துள்ளது. தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததால், சோதனையிட அனுமதி பெற்று காத்துக்கொண்டிருந்தனர்.

சோதனையில், அப்பார்சலில் உருளை வடிவில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலி அடையாள அட்டையுடன், அந்த பார்சலை பெற வந்த சரித் என்பவரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


சிக்கிய அந்த நபர், தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த சரித் என்பதும், முறைகேட்டில் ஈடுபட்டதாக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரிந்தது. பணி நீக்கம் செய்யப்பட்ட பின்பும், தூதரகத்தின் பெயரைச் சொல்லி சரித் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் செய்த கிடுக்குப்பிடி விசாரணையில், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் செயலாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷிற்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை நடத்திவருகிறது. இந்தநிலையில், குற்றம்சாட்டப்பட்டு தேடப்பட்டுவந்த முக்கிய நபரான முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், பெங்களூருவில் வைத்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading