கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஸ்வப்னா பெங்களூரு தப்பியது எப்படி? என்.ஐ.ஏ-விடம் சிக்கியது எப்படி?

கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா பிடிபட அவரது மகளின் செல்போன் காரணமாகியுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஸ்வப்னா பெங்களூரு தப்பியது எப்படி? என்.ஐ.ஏ-விடம் சிக்கியது எப்படி?
ஸ்வப்னா சுரேஷ்
  • Share this:
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் 2-வது குற்றவாளியாக கருதப்படுபவர்தான் இந்த ஸ்வப்னா. ஒருவாரமாக தேடப்பட்டு வந்த ஸ்வப்னா பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பத்துடன் இருந்தபோது பிடிபட்டுள்ளார்.

ஸ்வப்னா கடந்த வெள்ளிக்கிழமை வரை கேரளாவில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. முன்ஜாமின் மனு தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஒருவரை சந்திப்பதற்காக கொச்சியில் தங்கியிருந்துள்ளார். அதேநேரம், வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. விசாரணைக்கு எடுத்ததும் இனியும் கேரளாவில் இருந்தால் சிக்கிக் கொள்வோம் என நினைத்துள்ளார். அதனால் கார் மூலமாக தனது கணவர், இரு குழந்தைகள் மற்றும் இன்னொரு குற்றவாளியாக கருதப்படும் சந்தீப் உடன் பெங்களூருவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

இதற்கிடையே சில தொலைக்காட்சிகளுக்காக ஸ்வப்னா வெளியிட்ட குரல் பதிவே அவரைக் காட்டிக் கொடுத்துள்ளது. அந்த குரல் பதிவை வைத்து அது எந்த செல்போனில் பதிவு செய்யப்பட்டது என்ற விவரத்தை என்.ஐ.ஏ. கண்டுபிடித்துள்ளது. அந்த செல்போனில் இருந்து சென்ற அழைப்புகள், வந்த அழைப்புகளை அவர்கள் கண்காணித்துள்ளார்கள். அணைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் சனிக்கிழமை பிற்பகலில் ஸ்வப்னாவின் மகளால் ஆன் செய்யப்பட இருப்பிடத்தை அறிந்த மத்திய உளவுத்துறை என்.ஐ.ஏ.வை உஷார் படுத்தியது.


இதற்கிடையே சனிக்கிழமை காலையில் பெங்களூருவில் உள்ள பிடிஎம் லேஅவுட் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து ஸ்வப்னாவும், அவரது குடும்பத்தினரும் தங்கியுள்ளனர். ஆனால் அடையாளம் தெரிந்துவிடும் என அச்சப்பட்டதால் கோரமங்களா பகுதியில் உள்ள அபார்ட்மென்டில் அறை முன்பதிவு செய்து மாலை 6.30 மணிக்கு அங்கே சென்றுள்ளனர். ஹைதராபாத்தில் இருந்து சென்ற என்.ஐ.ஏ. குழுவினர் அடுத்த அரைமணி நேரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பை சுற்றி வளைத்து ஸ்வப்னா, அவரது கணவர், 2 குழந்தைகள் மற்றும் சந்தீப்பை பிடிபட்டனர்.

அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட்டும், 2 லட்ச ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. நாகலாந்தில் உள்ள சந்தீப்பின் நண்பரது ரிசார்ட்டிற்கு தப்பிச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் கால கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ள நிலையில் ஸ்வப்னா பெங்களூருக்கு தப்பிச் சென்றது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் பாஜக உதவியுடன் தப்பிச் சென்றதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அதேநேரம், கேரளாவில் இருந்த அவர்கள் எப்படி வெளியேறினார்கள் என முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading