Home » News » National » KERALA GOLD SMUGGLING ISSUE SAN

கேரளாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள தங்கக் கடத்தல்

கேரளாவில் தூதரகம் பெயரில் 15 கோடி ரூபாய் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடத்தலில் தொடர்புடையதாக கூறப்பட்ட அரசின் ஐ.டி. பிரிவு ஆபரேஷனல் மேனாஜர் ஸ்வப்னா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள தங்கக் கடத்தல்
News 18
  • News18
  • Last Updated: July 25, 2020, 9:49 AM IST
  • Share this:
தங்க கடத்தல் இப்படித்தான் நடக்கும் என்று யாராலும் யூகிக்கமுடியாத வகையில், சோதனையின்றி செல்லும் வி.ஐ.பி வழியில் கடத்தப்பட்ட சம்பவம் கேரளா திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, துபாயிலிருந்து, கேரளாவில் உள்ள ஐக்கிய அரசு அமீரக துணை தூதரக முகவரிக்கு சரக்கு விமானம் மூலம் ஒரு பார்சல் வந்துள்ளது. தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததால், சோதனையிட அனுமதி பெற்று காத்துக்கொண்டிருந்தனர்.

சோதனையில், அப்பார்சலில் உருளை வடிவில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலி அடையாள அட்டையுடன், அந்த பார்சலை பெற வந்த சரித் என்பவரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


சிக்கிய அந்த நபர், தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த சரித் என்பதும், முறைகேட்டில் ஈடுபட்டதாக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரிந்தது. பணி நீக்கம் செய்யப்பட்ட பின்பும், தூதரகத்தின் பெயரைச் சொல்லி சரித் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் செய்த கிடுக்குப்பிடி விசாரணையில், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் செயலாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷிற்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.


படிக்க: கொரோனா தொற்று பாதிப்பின் புதிய அறிகுறிகள்

படிக்க: குவைத் புதிய சட்டம் - தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் அபாயம்
திருனந்தபுரத்தை பூர்விகமாகக்கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஸ்வப்னா, அபுதாபியில் பிறந்தவர். 2013 ஆம் ஆண்டில் ஏர் இந்தியாவில் பணியாற்றிய ஸ்வப்னா, பின்னர் ஐக்கிய அரபு எமிரேட் துணைத் தூதரகத்தின் செயலாளராக பணியாற்றினார்.

துணை தூரகத்தில் ஏற்பட்ட பிரச்னையால், பணியிலிருந்து விலகி, கேரள அரசின் ஐ.டி. துறையின் ஆப்ரேஷனல் மேலாளரானார். அரபு, ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசும் ஸ்வப்னா, தூதரகத்தில் பணியாற்றியபோது தனக்கு கிடைத்த தொடர்பை வைத்தும், மொழி புலமையை பயன்படுத்தியும் தூதரக பெயரில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கடத்தல் நாடகத்தை அரங்கேற்ற, கடத்தல் கும்பல் ஒவ்வொரு முறையும் சுவப்னாவுக்கு 25 லட்சம் வரை கமிஷனாக கொடுத்ததாக சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியந்துள்ளது

ஸ்வப்னா சுரேஷின் வீட்டில் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், ஐ.டி. துறை ஆபரேஷனல் மேலாளர் பதவியிலிருந்து ஸ்வப்னாவை கேரள அரசு சஸ்பெண்ட் செய்தது.

இப்போது தலைமறைவாக உள்ள ஸ்வப்னாவின் பின்னணியில் முதலமைச்சர் அலுவலக முதன்மை செயலாளரும், ஐ.டி. துறையின் செயலாளருமான சிவசங்கர் உள்ளதாக கேரள காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் குற்றம்சாட்டினர். பதவி நீக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனக் கேரள காங்கிரஸ் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா கோரிக்கை வைத்தார். முதல்வர் அலுவலகத்துக்கும் தங்கம் கடத்தலுக்கும் தொடர்பு உள்ளதாக பகீர் குற்றச்சாட்டை கூறினார்.

ஏற்கெனவே குற்ற வழக்கு ஸ்வப்னா மீது நிலுவையில் உள்ள நிலையில், அரசின் ஐ.டி துறையில் எவ்வாறு வேலை வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

கடத்தல் தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்த போது, கேரள தலைமைச் செயலகத்திலிருந்து சரீத்தை தப்ப வைக்க சிலர் முயற்சி செய்ததாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் சுரேந்திரனும் சிவசங்கரை குறிவைத்து குற்றம்சாட்டினார்.

அரசியல் அழுத்தம் அதிகரித்ததால், முதன்மை செயலாளர் பதவியிலிருந்து சிவசங்கர் விடுவிக்கப்பட்டு, ஐ.டி. துறை செயலாளராக மட்டுமே செயல்படுவார் என கேரள அரசு அறிவித்தது.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading