ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: துபாயில் கைது செய்யப்பட்ட பைசல் ஃபரீது 230 கிலோ தங்கம் கடத்தியதாக NIA தகவல்..

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: துபாயில் கைது செய்யப்பட்ட பைசல் ஃபரீது 230 கிலோ தங்கம் கடத்தியதாக NIA தகவல்..

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்ட நபரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கேரள தங்கக்கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஃபைசல் ஃபரீத்தை கடந்த வாரம் துபாய் காவல்துறையினர் கைது செய்த நிலையில், அவர்தான் முக்கியக் குற்றவாளி எனவும் 230 கிலோ தங்கம் அவரால் கடத்திக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகமை கூறியுள்ளது.

  20க்கும் மேற்பட்ட முறை அரசதிகாரிகளின் துணையுடன் இந்த தங்கம் கடத்தப்பட்டது என்று விசாரணையின்போது ஃபைசல் பரீத் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளதால் கேரள தங்கக்கடத்தல் வழக்கு விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

  Also read: முதல்முறையாக கொரோனா இறப்பு விகிதம் 2.5 விழுக்காட்டிற்குக் கீழ் சரிந்தது - மத்திய சுகாதாரத்துறை

  3-வது குற்றவாளியாக துபாயைச் சேர்ந்த ஃபைசல் பரீத் அறிவிக்கப்பட்ட நிலையில், அவரைப் பிடிக்க இன்டர்போல் போலீஸ் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கியிருந்தது. இந்தச் சூழலில் அவரை கடந்த வாரம் துபாய் காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு அவர் கொண்டுவரப்படுகிறார்.

  Published by:Rizwan
  First published:

  Tags: Kerala, NIA, Smuggling, Swapna Suresh